டோக்கியோ ஒலிம்பிக்கில் அநாயசமாக தங்கப் பதக்கம் வென்று உலகப் புகழ் பெற்ற நீரஜ் சோப்ரா தற்போது ஸ்கூபா டைவராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வானத்திலும் இல்லை, பூமியிலும் இல்லை, நீருக்கடியில் என எங்கிருந்தாலும், நான் எப்போதும் ஜாவ்லினையே நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று நீரஜ் சோப்ரா சொல்கிறார்.


இந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா வரலாற்று சாதனை படைத்தார். தங்க மகன் நீரஜ் சோப்ரா, இந்தியாவின் ஈட்டி நட்சத்திரமாக புகழ் பெற்றிருக்கிறார்.


அதன்பிறகு உற்சாகமான ஆனால் பரபரப்பான வாழ்க்கை முறையை அனுபவித்து வருகிறார் சோப்ரா. எனவே, தற்போது அவர் மாலத்தீவில் விடுமுறையை உல்லாசமாக கழித்து வருகிறார். அங்கு அவர் எடுத்த புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகின்றன.



இந்த ஆண்டு தொடக்கத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஈட்டி இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற 23 வயதான நீர்ஜ் சோப்ராவின் முதல் முன்னுரிமை ஈட்டி என்றாலும், பொழுதுபோக்குக்காக நீருக்கடியில் ஸ்கூபா டைவிங் செய்கிறார்.


இதுவரை தனது ஒலிம்பிக் பதக்கத்திற்காக சமூக ஊடகங்களில் பேசுபொருளாக இருந்த நீரஜ் சோப்ரா, தற்போது டிவிட்டரில் வெளியிட்ட ஸ்கூபா டைவிங் வீடியோ வைரலாகிறது.


இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள நீரஜ், "வானத்திலும் இல்லை, பூமியிலும் இல்லை, நீருக்கடியில் என எங்கிருந்தாலும், நான் எப்போதும் ஜாவ்லினையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்!" என்ற பொருள்படும் பதிவை எழுதியுள்ளார்.



தற்போது மாலத்தீவில் உள்ள ஃபுரவேரி ரிசார்ட்டில் நீரஜ் தங்கியிருக்கிறார். 23 வயதான அவர், ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய டிராக் அண்ட் ஃபீல்ட் தடகள வீரர் ஆவார். பாராட்டு மழையில் பரவாமாக இருக்கும் அவரின் நீருக்கடியில் இருக்கும் இந்த காட்சிகள் காண்பவர்களின் கண்களை ஈர்க்கின்றன 


பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களிடையே மாலத்தீவு பிரபலமான இடமாக உள்ளது. பாலிவுட் பிரபலங்கள் முதல் பலரும், புத்துணர்ச்சியூட்டும் விடுமுறைக்காக இந்துமாக் கடலில்  அமைந்துள்ள மாலத்தீவுக்கிற்கு செல்கின்றனர்.


Also Read | பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் பரபரப்பு வீடியோ!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR