கம்பீரமான சிங்கம், வயதான காலத்தில் தளர்ந்து நடக்கும்போது அதனை சீண்டாதே விலங்குகளே இருக்காது. ஒரு காலத்தில் ஒற்றைப் பார்வையில் ஓடவிட்ட சிங்கம், கண்ணருகே வந்து வாலாட்டும் விலங்குகளை வயதான எதுவும் செய்யாது. காரணம், அதுவே நாடி நரம்புகள் தளர்ந்து உணவுக்கு வழியில்லாமல் தண்ணீரைக் குடித்துக் கொண்டு நாட்களை கடத்திக் கொண்டிருக்கும். அப்படியான சிங்கங்களை சில விலங்குள் சீண்டும்போது, பார்ப்பவர்களுக்கே ஒருவிதமான பரிதாபம் மேலோங்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அட்டாக் செய்ய வந்து அடங்கிப்போன மலைப்பாம்பு: மாஸ் காட்டிய சிறுத்தை


குறிப்பாக, ஓநாய்கள் வயதான சிங்கங்களை சுற்றி வளைத்து வேட்டையாடும் வீடியோக்கள் காண்போரை கலங்க வைக்கும். ஆனால் இன்று இணையத்தில் வைரலாகியிருக்கும் வீடியோவில், ஆமை ஒன்று சிங்கத்தை துரத்தி துரத்தி முத்தம் கொடுக்கிறது. டிவிட்டரில் இந்த வீடியோ பல ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. வயதாகி இருக்கும் சிங்கம், குளம் ஒன்றில் தண்ணீர் குடிக்க வருகிறது. மெதுவாக தண்ணீரை பருகும்போது தண்ணீருக்குள் இருந்து எட்டிப்பார்க்கும் ஆமை, சிங்கத்தின் அருகே பயப்படாமல் சென்று முத்தம் கொடுக்கிறது.



ஒருமுறை அல்ல, இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் அவ்வாறு முத்தம் கொடுக்கிறது. ஆனால், அந்த சிங்கம் ஆமையை ஒன்றும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டு செல்கிறது. மேலும், ஆமையின் செயல் பார்ப்பவர்களை வெகுவாக ரசிக்க வைத்துள்ளது. விரக்தியில் இருக்கும் சிங்கத்துக்கு ஆமை கொடுக்கும் முத்தம் ஆறுதலாகவும் இருந்துள்ளது. 


மேலும் படிக்க | பாம்பிற்கே தண்ணி காட்டிய நபர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR