இந்தியாவிற்கு முதன்முறையாக பயணம் மேற்கொண்டுள்ள twitter தலைமை நிர்வாக அதிகாரி Jack Dorsey காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்!



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சந்திப்பிற்கு பின்னர் காங்கிரஸ் தலைவர் தனது ட்விட்டர் பக்கதின் வாயிலாக இருவரின் சந்திப்பு குறித்து நாட்டு மக்களுக்கு தெரியபடுத்தியுள்ளார். சமூக ஊடகங்களின் வாயிலாக சமீப காலமாக போலி செய்திகள் பரவி வரும் நிலையில் இந்த போலி செய்தி நடைமுறையினை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் ட்விட்டர் தரப்பில் இருந்து போலி செய்திகள் பரவும் நடவடிக்கைகளை தடுக்கும் புதிய யுக்திகளை ஆராய்ந்து வருவதாக Jack Dorsey தெரிவித்ததாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


இதனைத்தொடர்ந்து புதுடெல்லி IIT டவுன் ஹால் கூட்டத்திலும் Jack Dorsey பங்கேற்றுள்ளார். 


முன்னதாக கடந்த சனிக்கிழமை அன்று புத்த துறவி தலாய் லாமா அவர்களையும் Jack Dorsey சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து Jack Dorsey தனது ட்விட்டர் பக்கத்தில் "தலாய் லாமா ஒரு சிறந்த ஆசிரியர்" என குறிப்பிட்டுள்ளார்.



கடந்த நவம்பர் 10-ஆம் நாள் இந்தியா வந்த Jack Dorsey, இந்தியாவில் தான் பயணம் மேற்கொண்டு வரும் நிகழ்வுகளை தொடர்ந்த தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்து வருகின்றார். 



அந்த வகையில் ஜெய்பூரில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக அவர் பகிர்ந்துள்ளார்!