கும்பமேளாவில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள 5 துப்புரவு தொழிலாளர்களின் கால்களை கழுவி, பாதை பூஜை செய்துள்ளார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரியாகராஜ் என பெர்மாற்றம் செய்யப்பட்ட அலகாபாத்தின் முதல் கும்பமேளா வரும் ஜனவரி 15 ஆம் நாள் துவங்கி வெகு விமர்சையாக நடைப்பெறவுள்ளது. எதிர்வரும் விழாவை முன்னிட்டு ₹4300 கோடி செலவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப் பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து சுமார் 250 சதுர கிமி பரப்பளவில் தனிவொரு தற்காலிக நகரத்தினை ஏற்பாடு செய்துவருகின்றனர்.


இந்நிலையில், உத்திரபிரதேசத்தில் பிரயாக்ராஜ் நகரின் கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி, அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள 5 துப்புரவு தொழிலாளர்களின் கால்களை கழுவி, பாதை பூஜை செய்துள்ளார்.


கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாகஉத்திரபிரதேசத்தில் திரிவேணி சங்கமத்தில் நடக்கும் கும்பமேளாவில் நாள் தோறும் லட்சக்கணக்கானோர் புனிதநீராடி வருகின்றனர். இருப்பினும் அப்பகுதி தூய்மையாக பராமரிக்கப்படுவதற்காக அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளவர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு பிரதமர் மோடி விருதுகள் வழங்கினார். தொடர்ந்து யாரும் எதிர்பாராத விதமாக, விருதுபெற்ற 5 துப்புரவு தொழிலாளர்களின் பாதங்களை கழுவி, பூஜை செய்தார். அந்த வீடியோவை, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


அந்த வீடியோவுடன், என் வாழ்நாள் முழுவதும் நான் சந்தோஷமாக இருப்பேன்!


ஸ்வச்ச் பாரத் கனவு உணர்ந்து கொண்டிருக்கும் போது முன்னணி வகிப்பவர்களிடமிருந்து விசேஷமான துப்புரவு பணியாளர்களை மதிக்கிறேன்!



நான் ஒவ்வொருவருக்கும் ஸ்வாட்ச் பாராட்டிற்கு ஒரு பங்களிப்பை வழங்குவேன்" என அந்த ட்விட்டரில் பதுவிட்டுள்ளார். முன்னதாக நடந்த விருது வழங்கும் விழாவில் பேசிய மோடி, கும்பமேளாவிற்காக 20,000 க்கும் மேற்பட்ட குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.