ஸ்பேஸ்சிற்கு தமிழில் எமோஜி வெளியிட்ட டிவிட்டர் நிறுவனம்
முதலில் ஆப்பிள் பயனர்களுக்கு மட்டுமே இந்த ஸ்பேஸ் (Twitter Spaces) ஆப்சன் சென்றடைந்தது.
சமூக வலைதளங்களில் முக்கிய ஒன்றாக கருதப்படும் டிவிட்டர் புதிய புதிய அப்டேட்களை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டிவிட்டர் ஸ்பேஸ் என்ற புதிய அப்டேட்டை கொண்டுவந்தது டிவிட்டர் நிறுவனம்.
அறிமுகமான சிறிது நாட்களிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தது இந்த ஸ்பேஸ். கருத்துக்களை எழுத்து மூலமாக மட்டும் சொல்ல உதவிய டிவிட்டர் (Twitter India) தற்போது குரல் மூலமாகவும் வெளிபடுத்த உதவியதே இதன் வெற்றிக்கு முக்கிய பங்கு. முதலில் ஆப்பிள் பயனர்களுக்கு மட்டுமே இந்த ஸ்பேஸ் (Twitter Spaces) ஆப்சன் சென்றடைந்தது. பின்பு அதனில் இருக்கும் குறைகளை சரிசெய்து டிவிட்டர் அக்கவுண்ட் இருக்கும் யார் வேண்டுமானாலும் ஸ்போஸ் Host செய்ய முடியும் என்ற நிலைக்கு வந்துள்ளது.
ALSO READ | Twitter-க்கு போட்டியாக GETTR; டொனால்ட் டிரம்ப் குழுவின் புது சமூக ஊடக தளம்
கொரானா காலத்தில் புதிய திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா தொடங்கி, புரோமசன்கள் வரை மக்களிடத்தில் எடுத்து செல்ல உதவிகரமாக இருந்து வருகிறது இந்த டிவிட்டர் ஸ்பேஸ். தற்போது இதற்கு தமிழில் எமோஜியையும் அறிமுகப்படுத்தியுள்ளது டிவிட்டர் நிறுவனம். மைக்வடிவில் ‘அ’ என்று வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த எமோஜி. டிவிட்டர் ஸ்பேஸில் host மட்டுமே இருந்து வந்த நிலையில் சமீபத்தில் co-host என்ற புதிய அப்பேட்டையும் கொண்டு வந்தது.
வரும் நாட்களில் யூடியூப் போன்று ஸ்பேஸை ஒருங்கிணைக்கும் நபர்கள் கட்டணத்தை நிர்ணயித்து ஒரு பாதியை தாங்கள் எடுத்து கொள்வதற்கான வசதியையும் அறிமுகப்படுத்த உள்ளது ட்விட்டர்.
ALSO READ | வீடியோ அழைப்பில் விசாரணைக்கு ஆஜராக தயார்: Twitter India தலைவர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR