Gucci Kurta: உலகமே கொரோனா தொற்றுக்கு மத்தியில் சிக்கி தவித்துக்கொண்டு இருக்கிறது. அரசாங்கங்களும் மக்களும் செய்வதறியாமல் குழம்பி தொற்றிலிருந்து விடுபட பலவித முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கும் வேளையில், இது எதைப் பற்றியும் கலவலைப்படாமல் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு உலகமும் இருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Gucci என்பது ஒரு ஆடம்பர ஃபேஷன் பிராண்டாகும். பலவித ஃபாஷன் பொருட்களை மிக அதிக விலையில் விற்கும் இந்த பிராண்டின் பொருட்களை வைத்திருப்பவர்கள், ஃபாஷன் பிரபலங்களாகவும், சமுதாயத்தில் உயர் அந்தஸ்தில் இருப்பவர்களாகவும் பார்க்கப்படுவது வழக்கம். தற்போது, Gucci, எம்பிராய்டரி செய்த ஒரு குர்தாவை 2.5 லட்சத்திற்கு விற்பனை செய்கிறது என்ற தகவல் இணையத்தில் வைரலாக (Viral on Internet) பரவி வருகிறது. இது ஆச்சரியத்தை அளிக்கும் விதத்தில் இருந்தாலும், இது உண்மையான விஷயம்தான். இந்த செய்தியை ஒரு ட்விட்டர் பயனர் பகிர்ந்தவுடன், இது வைரல் ஆகி வருகிறது. இணைய வாசிகள் இதற்கு பல்வேறு விதமான கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


Gucci வலைத்தளத்திலிருந்த குர்தாவின் புகைப்படத்தின் ஸ்க்ரின்ஷாட்டை பதிவு செய்த இந்த குறிப்பிட்ட ட்விட்டர் பயனர் (Twitter User), இதன் தலைப்பில், "Gucci ஒரு இந்திய குர்தாவை 2.5 லட்சத்திற்கு விற்பனை செய்கிறது. இதே குர்தாவை என்னால் இங்கு 500 ரூபாயில் வாங்க முடியும்" என எழுதியிருக்கிறார். 



ALSO READ: ‘Any tips sir’: தல தோனி டிவிட்டரில் கொடுத்த கிண்டல் பதில் வைரலாகி வருகிறது


Gucci வலைத்தளத்தில் இந்த குர்தா, "மலர் எம்பிராய்டரி செய்யப்பட்ட ஆர்கானிக் லினன் கஃப்தான் (Floral embroidery organic linen kaftan)" என வர்ணிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 3,500 அமெரிக்க டாலராக, அதாவது 2,55,878 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆஃப்-வைட் லினென் குர்தாவான இதில் பூ வடிவ எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ளது. கை பகுதியிலும் சில வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


இந்த பதிவு வைரல் ஆனவுடன், நம் நாட்டு சமூக ஊடக பயனர்கள் (Social Media Users) இந்த குர்தாவின் அதிகப்படியான விலையை பற்றிய தங்கள் கருத்துகளை பகிர்ந்தனர். இந்த ஃபாஷன் பிராண்ட் இத்தாலியில் உள்ள ஃப்ளாரன்ஸ் நகரில் உள்ளது.


ஒரு ட்விட்டர் பயனர் வழக்கமாக பேரம் பேசும் பாணியில், "இதுக்கு 150 ரூபாய்க்கு மேல ஒரு ரூபா கூட கொடுக்க முடியாது" என்று வேடிக்கையாக கூறியுள்ளார். மற்றொருவர், "சரோஜினி நகர் மார்ட்கெட்டில் 250 ரூபாய்க்கு கிடைக்கும்" என்று கூறியுள்ளார். சரோஜினி நகர் மார்கெட் என்பது பல சர்வதேச பிராண்டுகள் மற்றும் உள்ளூர் பிராண்டுகளைக் கொண்ட டெல்லியின் ஒரு மிகப்பெரிய துணி சந்தையாகும். எனினும், இதன் மையப்புள்ளியாக இருப்பது, அனைத்து வடிவங்களிலும், அளவுகளிலும் பலவகையான ஆடைகளை விற்கும் சாலையொர கடைகள்தான்.


ALSO READ: வேட்டி கட்டி வேற லெவலில் கலக்கும் CSK சின்ன தல சுரேஷ் ரெய்னா: வீடியோ வைரல்


Gucci குர்தாவின் விலை குறித்து நம் நாட்டு இணைய வாசிகள் அடித்த கமெண்டுகளில் சில உங்கள் பார்வைக்கு:





உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR