வேட்டி கட்டி வேற லெவலில் கலக்கும் CSK சின்ன தல சுரேஷ் ரெய்னா: வீடியோ வைரல்

IPL ஹீரோவும், CSK அணி ரசிகர்களின் அபிமான வீரருமான சுரேஷ் ரெய்னா ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் வேட்டி கட்டிக்கொண்டு கலக்கும் பாணியைக் காண முடிகிறது. 

Written by - ZEE Bureau | Last Updated : Jun 1, 2021, 03:08 PM IST
  • இன்ஸ்டாகிராமில் சுரேஷ் ரெய்னா பகிர்ந்த வீடியோவால் ரசிகர்களிடம் உற்சாகம்.
  • வீடியோவில் ரெய்னா வேட்டியில் காணப்படுகிறார்.
  • இது ரெய்னாவின் ஒரு படப்பிடிப்பின் வீடியோ.
வேட்டி கட்டி வேற லெவலில் கலக்கும் CSK சின்ன தல சுரேஷ் ரெய்னா: வீடியோ வைரல்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்ன தலையுமான சுரேஷ் ரெய்னா வேட்டி கட்டி கலக்கும் காட்சி ஒன்று காணக்கிடைத்துள்ளது. IPL ஹீரோவும், CSK அணி ரசிகர்களின் அபிமான வீரருமான சுரேஷ் ரெய்னா ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் வேட்டி கட்டிக்கொண்டு கலக்கும் பாணியைக் காண முடிகிறது. எனினும், ரெய்னாவின் இந்த வீடியோ ஒரு பழைய வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது. 

வேட்டியில் வெற லெவலில் காணப்படும் சுரேஷ் ரெய்னா

வீடியோவில், ஒரு விளம்பர படப்பிடிப்பின் போது சுரேஷ் ரெய்னா (Suresh Raina) வேடிக்கையான பாணியில் இருப்பதைக் காண முடிகிறது. இந்த வீடியோவைப் பகிர்ந்துகொண்டு, சுரேஷ் ரெய்னா இதன் தலைப்பாக, "சில பழைய படப்பிடிப்பு நாட்கள் நினைவில் வருகின்றன. சீக்கிரம் செட்டுக்கு திரும்புவேன் என நம்புகிறேன்." என்று எழுதியுள்ளார். வேட்டியில் இருக்கும் சுரேஷ் ரெய்னாவை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Suresh Raina (@sureshraina3)

ALSO READ: சமையலிலும் கலக்கும் சின்ன தல: வைரல் ஆகும் குக் சுரேஷ் ரெய்னாவின் வீடியோ!!

IPL 2021-ன் மீதமுள்ள போட்டிகள் UAE-ல் நடக்கும் 

IPL 2021-ன் மீதமுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் IPL-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திர பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா மீண்டும் கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் (MS Dhoni) விளையாட மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார். கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியின் போது, ​​ஹோட்டல் அறை தொடர்பாக சுரேஷ் ரெய்னா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திற்கு இடையே பிளவு ஏற்பட்டதாக செய்திகள் வந்தன. ஐக்கிய அரபு அமீரகத்தில் செய்யப்பட்டிருந்த தனது அறையின் ஏற்பாட்டில் சுரேஷ் ரெய்னா மகிழ்ச்சியடையவில்லை என கூறப்பட்டது. 

சென்ற ஆண்டு IPL-லிலிருந்து ரெய்னா தானாக விலகினார் 

சில காரணங்களால் சுரேஷ் ரெய்னா அவர் IPL 2020 இலிருந்து தானாக விலகினார். IPL 2020 இல் சிஎஸ்கேவுக்காக எந்த போட்டியிலும் விளையாடாமல் ரெய்னா ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியா திரும்பினார். சி.எஸ்.கே மேலாளருடன் தனக்கு எந்தவிதமான தகராறும் இல்லை என்று ரெய்னா பின்னர் தெளிவுபடுத்தினார். தனிப்பட்ட காரணங்களால் ஐபிஎல் 2020 இலிருந்து தனது பெயரை வாபஸ் பெற்றதாக ரெய்னா தெரிவித்திருந்தார்.

எனினும், தற்போது ரெய்னா மீண்டும் அணியுடன் இணைந்துவிட்டார். தல தோனியையும் சின்ன தல ரெய்னாவையும் மீண்டும் ஒன்றாக அணியில் கண்டதில் CSK ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ALSO READ: CSK contract கிடைத்தவுடன் தோனியின் ரியாக்ஷன் எப்படி இருந்தது? சுரேஷ் ரெய்னா கூறுகிறார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News