அமெரிக்க அதிபர் trump-ன் ஆங்கில புலமைக்கு கிடைத்த பரிசு!
சிரியாவில் ISIS-க்கு எதிரான போரில் வெற்றி பெற்ற காரணத்தால் அமெரிக்கப் படைகள் அங்கிருந்து முற்றிலுமாக வெளியேறுகிறது என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் ISIS-க்கு எதிரான போரில் வெற்றி பெற்ற காரணத்தால் அமெரிக்கப் படைகள் அங்கிருந்து முற்றிலுமாக வெளியேறுகிறது என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் இந்த கருத்திற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ISIS பயங்கரவாதிகள் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. ISIS பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இந்த உள்நாட்டுப் போரின்போது குர்து இனப் போராளிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தங்கள் நாட்டு வீரர்களை அனுப்பி போரிட்டது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த டிசம்பர் 20-ஆம் நாள் தனது ட்விட்டர் பக்கத்தில் "சிரியாவில் ISIS தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுவிட்டோம், தீவிரவாதிகளை தோற்கடிக்க அனுப்பப்பட்ட அமெரிக்கப் படை திரும்பபெறப்படுகிறது" என குறிப்பிட்டு இருந்தார். ட்ரம்பின் இந்த கருத்திற்கு எழுந்த விமர்சனங்களை விட, இந்த ட்விட் மூலம் அவரது ஆங்கில புலமைக்கு எதிராக எழுந்த விமர்சணங்கள் தான் அதிகம்.
“Getting out of Syria was no surprise. I’ve been campaigning on it for years, and six months ago, when I very publicly wanted to do it, I agreed to stay longer. Russia, Iran, Syria & others are the local enemy of ISIS. We were doing *there work. Time to come home & rebuild..” என ட்ரம்ப் பதிவிட இதில் their-க்கு பதிலாக ட்ரம்ப் there என பதிவிட்டிருந்தார்.
இதற்கு நெட்டீசன்கள் பலரும் பல விமர்சனையாக கருத்துகளை முன்வைத்துள்ளனர். அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு...