Twitter: சிறந்த கேப்டனாக செயல்பட்டது இம்ரான் கானா? விராட்டா?
கேப்டன்சி கடமைகளுடன் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரர்களுக்கான ஐ.சி.சி ட்விட்டர் (Twitter) வாக்கெடுப்பில் விராட் கோலியை விட சிறிய வித்தியாசத்தில் இம்ரான் கான் முன்ன்னிலை பெற்றிருக்கிறார். இதுபோன்ற வாக்கெடுப்பில் முன்னணி இடம் பெற்ற இந்திய வீரர்களில் விராட் கோலி தடம் பதித்திருக்கிறார்.
புதுடெல்லி: கேப்டன்சி கடமைகளுடன் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரர்களுக்கான ஐ.சி.சி ட்விட்டர் (Twitter) வாக்கெடுப்பில் விராட் கோலியை விட சிறிய வித்தியாசத்தில் இம்ரான் கான் முன்ன்னிலை பெற்றிருக்கிறார். இதுபோன்ற வாக்கெடுப்பில் முன்னணி இடம் பெற்ற இந்திய வீரர்களில் விராட் கோலி தடம் பதித்திருக்கிறார்.
புகழ்பெற்ற பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நடத்திய டிவிட்டர் வாக்கெடுப்பில் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறார். கேப்டன்களாக ஆனபின் தனிப்பட்ட செயல்திறனை மேம்படுத்திய சிறந்த வீரருக்கான இந்த ட்விட்டர் வாக்கெடுப்பில் இந்தியாவின் சிறந்த கிரிக்கெட்டராக விராட் கோலி (Virat Kohli) இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.
இந்த வாக்கெடுப்பில் விராட் கோஹ்லி (Virat Kohli), இம்ரான் கான், ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் மெக் லானிங் (Meg Lanning) ஆகியவர்களில் இருந்து சிறந்தவரை தேர்வு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டது. இதில் பு 536,346 வாக்குகள் போடப்பட்டன.
இதில் 47.3 சதவீத வாக்குகளைப் பெற்று இம்ரான் கான் (Imran Khan) முந்தினார். கோஹ்லி அவருக்கு சரியான போட்டி கொடுத்தாலும் 46.2 சதவீத வாக்குகளைப் பெற்றார். தென்னாப்பிரிக்காவின் கிரேட் டிவில்லியர்ஸ் (great de Villiers) 6 சதவீதத்தையும், ஆஸ்திரேலிய ஜாம்பவான் லான்னிங் (Lanning) 0.5 சதவீத வாக்குகளையும் பெற்றனர்.
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியை வழிநடத்தும் கோஹ்லி, இந்திய அணியின் (Team India) கேப்டனாக இல்லாத போது அவரது ரன் ரேட் ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 51.29 என்ற நிலையில் இருந்தது. இதுவே அவர் கேப்டனாக இருக்கும்போது 73.88 ரன் ரேட் வைத்திருக்கிறார்.
Also Read | Pakistan PM Imran Khan: ட்விட்டரில் ட்ரோல் ஆகும் காரணம் தெரியுமா?
1992 ல் பாகிஸ்தானை உலகக் கோப்பை வெற்றிக்கு அழைத்துச் சென்ற இம்ரான், பேட்டிங் மட்டும் செய்தபோது டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக 25.43 ரன் ரேட் வைத்திருந்தார். இதுவே கேப்டனாக, பாகிஸ்தான் அணியை வழிநடத்தியபோது அவரது பேட்டிங் சராசரி 52.34 ஆக உயர்ந்தது.
டிவில்லியர்ஸ் (De Villiers) ஆண்கள் கிரிக்கெட்டில் மிக வேகமாக ஒருநாள் சதம் சாதனை படைத்தவர், கேப்டனாக சராசரியாக 63.94 ரன் ரேட் வைத்திருக்கிறார். கேப்டனாக இல்லாதபோது அவரது ரன் ரேட் 45.97 ஆக இருந்தது.
28 வயதான Lanning தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை ஐந்து உலகக் கோப்பை பட்டங்களை (ஒரு ஒருநாள் WC மற்றும் நான்கு T20I WC கள்) வென்றுள்ளார். கேப்டனாக இல்லாதபோது, அவர் சராசரியாக 43.87 ரன் ரேட் வைத்திருந்தார். ஆனால் கேப்டனான பிறகு ரன் ரேட் 60.93 ஆக உயர்ந்துவிட்டது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR