Pakistan PM Imran Khan: ட்விட்டரில் ட்ரோல் ஆகும் காரணம் தெரியுமா?

ஒரு நாட்டின் தலைவர் சமூக ஊடகங்களில் மற்ற நாட்டுத் தலைவர்களை unfollow செய்யும்போது, அது உலகெங்கிலும் தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறது. நிலைமை ஏதோ மோசமாகிவிட்டது என்பதைக் குறிக்கிறது...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 8, 2020, 06:42 PM IST
  • ட்விட்டரில் ட்ரோல் ஆகும் இம்ரான் கான்
  • பாகிஸ்தான் பிரதமர் ஏன் அனைவரிடம் இருந்து விலகினார்?
  • முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை விட மோசம் என சொல்வதற்கான காரணம் என்ன?
Pakistan PM Imran Khan: ட்விட்டரில் ட்ரோல் ஆகும் காரணம் தெரியுமா? title=

பிரதமர் இம்ரான் கான் ட்விட்டரில் யாரையும் பின்தொடரவில்லை. தெற்காசியாவில் மிக அதிகமாக சமூக ஊடகங்களில் ட்ரோல் ஆகும் பிரபலங்களில் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் தான் முதலிடத்தில் இருக்கிறார் என்பது மறுக்கமுடியாத உண்மை. சமீபத்தில், இம்ரான் கான் தனது ட்விட்டர் கணக்கிலிருந்து யாரையும் பின்தொடரவில்லை. இது ட்விட்டரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனது முன்னாள் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித் (Jemima Goldsmith) என்ன செய்கிறார், என்ன சொல்கிறார் என்று பார்க்க விரும்பவில்லை பாகிஸ்தான் பிரதமர். எனவே மீண்டும் டிவிட்டரில் ட்ரோல் ஆனார் இம்ரான் கான். "முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை (Nawaz Sharif) விட மோசம் இம்ரான்" என்று பாகிஸ்தான் பிரதமர் டிவிட்டரில் ட்ரோல் ஆவதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

திங்கள்கிழமை மாலை, ட்விட்டரில் பயனர்கள் இம்ரான் கானின் அதிகாரப்பூர்வ கணக்கு  @ImranKhanPTI யாரையும் பின்தொடரவில்லை என்பதை கவனிக்கத் தொடங்கினார்கள்.

திரைப்பட தயாரிப்பாளரான தனது முதல் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித்தையும் அவர் பின்தொடரவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தது.  

இம்ரானின்  (Imran Khan) முதல் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித்தை பிரிந்த பிறகும் இம்ரான் கான் அவரை தொடர்ந்து பின்பற்றுவதை ட்விட்டர் பயனர்கள் கவனித்து வந்தனர். ஜெமிமாவிடம் இருந்து பிரிந்த பிறகு இம்ரான் கான் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார்.

2010 இல் டிவிட்டர் கணக்கை உருவாக்கியுள்ளார். ட்விட்டரில் ஒரு நபரை பின்தொடர்ந்ததும், அவர்கள் ட்வீட் செய்வது, ரீ-ட்வீட் செய்வது அல்லது like செய்வது என அனைத்தும் ஒருவரின் home feed-இல் தெரியும். மக்களை, பிறருடன் இணைப்பதுதான் ட்விட்டரின் அடிப்படை நோக்கம். ஒருவர், வேறு எந்தவொரு நபரையும் பின்பற்றவில்லை என்றால், blank feed இருக்கும்.  

தற்போது, பாகிஸ்தான் (Pakistan) பிரதமரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 12.9 மில்லியன் ஆகும். திடீரென இம்ரான் கான் அனைவரையும் unfollow செய்ததாக உலகெங்கிலும் உள்ள பயனர்களால் அவர் தொடர்ந்து ட்ரோல் செய்யப்படுகிறார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை நையாண்டி செய்யும் ட்ரோல்

ஒரு நாட்டின் தலைவர் சமூக ஊடகங்களில் மற்ற நாட்டுத் தலைவர்களை unfollow செய்யும்போது, அது உலகெங்கிலும் தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறது. நிலைமை ஏதோ மோசமாகிவிட்டது என்பதைக் குறிக்கிறது. ஆனால் கான் அனைவரையும் ஒதுக்கி வைத்துவிட்டார் என்பதும், அதற்கு காரணம் என்ன என்பதும் தெரியவில்லை.  

Also Read | வேற்றுகிரகவாசிகள் தலைமறைவாக இருப்பதாக ex-Israeli general பகீர் தகவல்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News