புதுவை ஆளுநர் உள்பட 3 பிரபலங்களின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்களின் ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்களின் ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று காலை பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் அவர்களின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதேப்போல் பாலிவுட் நடிகர் அனுபம் கஹெர்-ன் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
அனுபம் ட்விட்டர் கணக்கினை முடக்கியது, பாக்கிஸ்தானை சேர்ந்த ப்ரோ பாக்கிஸ்தான் குழு என்பது தெரியவந்துள்ளது.
புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்களின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதை குறித்து அவர் புகார் அளித்துள்ளதாகவும், பிரச்சனைகள் முடிந்த பின்னர் விரைவில் ட்விட்டர் கணக்கு மீண்டும் பயன்படுத்தப்படும் எனவும் புதுவை அரசு தரப்பு ட்விட்டர் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது!