Viral Video: ஒவ்வொரு நாளும் பல வீடியோக்கள் வெளியாகின்றன். அதில் சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சரைகேலா மாவட்டத்தின் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ கிளிப்பில் சண்டி பஜாரில் (Chandil Bazaar) ஒரு பையனுக்காக இரண்டு பெண்களுக்கிடையில் எப்படி கடுமையான சண்டை ஏற்பட்டது என்பதைக் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தச் சம்பவம் புதன்கிழமை மாலை, மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள ஒரு சந்தையில் இரண்டு இளம் பெண்கள் சண்டையிட்டு உள்ளனர். இந்த சண்டையை அடுத்து அவர்களை சுற்றி அங்கு ஒரு பெரிய கூட்டம் கூடுகிறது. இரண்டு பெண்கள் தங்களுக்குள் சண்டையிடுவதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அந்த சம்பவத்தை அவர்களின் தொலைபேசியில் பதிவு செய்தனர். 


தகவலின் படி, சந்தைக்கு வந்த ஒரு இளம் பெண் தனது காதலனை வேறொரு பெண்ணுடன் பார்த்ததும், அந்த இளம் பெண் பயங்கரமாக கோபமடைந்தார். உடனடியாக தனது காதலுடன் சுற்றிய பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். பின்னர் அது சண்டையாக மாறியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  


 



ALSO READ | Viral Video: நீச்சல் குளத்தில் விழுந்த புகைப்படக்காரர் - மணப்பெண் மணமகன் அதிர்ச்சி


பையனுக்காக பெண்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்கிறார்கள்:
இந்த சம்பவம் புதன்கிழமை மாலை 6:00 மணியளவில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு கடையின் முன், இரண்டு இளம் பெண்கள் சாலையில் கீழே விழுந்து தங்களுக்குள் அடித்துகொண்டனர். அங்கிருந்த வாலிபரும், ஒரு பெண்ணும் சண்டையிடும் இரண்டு பேரை சமாதானம் செய்ய முயற்சிக்கிறார்கள். திடிரென அந்த வாலிபர், இளம் பெண்ணை அடிக்கிறார். அக்கம்பக்கம் இருந்தவர்கள் அவனை எச்சரிக்கிறார்கள். 


சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் போலீசார் வந்தனர்:
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தவுடன், அவர்கள் அங்கு சென்றனர் ஆனால் அதற்கு முன் இளைஞர்களும், பெண்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.


ALSO READ | Viral Video: அனைவருக்கும் முன்னால் மணப்பெண்ணுக்கு நடந்த சம்பவம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR