Viral Video: நீச்சல் குளத்தில் விழுந்த புகைப்படக்காரர் - மணப்பெண் மணமகன் அதிர்ச்சி

வைரல் வீடியோ: அதிர்ஷ்டவசமாக, புகைப்படக்காரருக்கு எதுவும் அடிபடவில்லை மற்றும் நீச்சல் குளத்தில் விழுந்ததாலும் அவரது கேமராவை தண்ணீரில் நனையாதப்படி பார்த்துக்கொண்டார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 9, 2021, 09:07 PM IST
Viral Video: நீச்சல் குளத்தில் விழுந்த புகைப்படக்காரர் - மணப்பெண் மணமகன் அதிர்ச்சி title=

வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் திருமண வீடியோக்கள் அதிக அளவில் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது ஒரு இந்திய திருமண நிகழ்ச்சியின் போது வேடிக்கையான மற்றும் வியத்தகு சம்பவங்கள் வைரலாகின்றன. திருமண புகைப்படக்காரர் தற்செயலாக நீச்சல் குளத்தில் விழுந்த தருணத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். கடந்த மாதம் திருமணம் நடந்தாலும், அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட கிளிப், @perinastudios, திருமண உடையில் மணமகனும், மணமகளும் ஒரு கட்டிடத்திலிருந்து வெளிவருவதை வீடியோவில் காட்டப்படுகிறது. புகைப்படக்காரர் அவர்களை போட்டோ எடுத்துக்கொண்டே பின்னோக்கி நகர்ந்தபோது, அவருக்கு பின்னல் இருந்த நீச்சல் குளத்தில் விழுந்தார். அவர் குளத்தில் விழுந்ததைக் கண்டு தம்பதியினர் மற்றும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

 

ALSO READ | Viral Video: அனைவருக்கும் முன்னால் மணப்பெண்ணுக்கு நடந்த சம்பவம்!

அதிர்ஷ்டவசமாக, புகைப்படக்காரருக்கு எதுவும் அடிபடவில்லை மற்றும் நீச்சல் குளத்தில் விழுந்ததாலும் அவரது கேமராவை தண்ணீரில் நனையாதப்படி பார்த்துக்கொண்டார். 

மணப்பெண் மற்றும் மணமகன் அடைந்த அதிர்ச்சியை சுலோமோசனில் காட்டப்பட்டு உள்ளது. இரண்டாவது வீடியோவும் அப்பெரினா ஸ்டுடியோவால் பகிரப்பட்டது. ஆன்லைனில் பகிரப்பட்டதிலிருந்து, வீடியோ வைரலாகி வருகிறது மற்றும் வேடிக்கையான கருத்துகளால் நிரம்பியுள்ளது.

 

ALSO READ | தண்ணீருக்குள் கர்ப்பகால ஃபோட்டோஷூட் செய்து அசத்தும் வெண்பா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News