வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒருவர் ஒரு வினோதமான கூற்றை வெளியிட்டுள்ளார். தான் 23 நிமிடங்கள் இறந்த நிலையில் இருந்ததாக அவர்  தெரிவித்துள்ளார். அந்த இடைவெளியில் அவர் நரகத்தின் ஆழத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டடாகவும் குறிப்பிட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த ஆழத்தில், ஒரு குழியில் எரியும் உடல்களை அவர் கண்டதாகவும் தெரிவித்துள்ளார். தனது 'பயங்கரமான அனுபவத்தை’ விவரிக்கும் பில் வைஸ் (Bill Wiese), தான் இரண்டு கொடூர ராட்சசர்களை சந்தித்ததாகவும், அவர்கள் தன் உடலில் இருந்து சதையை எடுத்ததாகவும் கூறினார்.


இப்படித்தான் இருந்தது நரகம் 


தி சன் பத்திரிகையின் அறிக்கையின்படி, பில் வைஸ் என்ற நபர் கிறிஸ்தவ ஒளிபரப்பாளரான டி.சி.டி நெட்வொர்க்கிடம், தண்ணீர் குடிப்பதற்காக நள்ளிரவில் எழுந்தபோது உடலில் இருந்து உயிர் வெளியேறுவதை தான் உணர்ந்ததாக கூறினார். யாரோ ஒருவர் பில்லின் ஆன்மாவை உடலில் இருந்து இழுத்து, பின்னர் ஒரு நீண்ட இருண்ட சுரங்கப்பாதை வழியாக நரகத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் அந்த அமெரிக்கர் (American) தெரிவித்தார். 


'அது மிகவும் சூடான இடமாக இருந்தது. நான் நரகத்தில் ஒரு சிறைச்சாலையில் ஒரு கல் தரையில் இறங்கினேன். சிறைச்சாலையின் (Prison) சுவர்கள் நிலவறையைப் போல கல்லால் ஆனவையாக இருந்தன’ என்று அவர் கூறினார்.


நான் நெருப்பு உலகத்தைப் பார்த்தேன்


தான் சென்ற இடம், தூய்மையற்ற, துர்நாற்றம் நிறைந்த, புகை நிறைந்த அசுத்தமான இடமாக இருந்தது என்று பில் வைஸ் கூறுகிறார். அவர் ஒரு நெருப்பு உலகத்தை நேரடியாக எதிர்கொண்டார். இந்த சம்பவம் நவம்பர் 1998 ஆம் ஆண்டில் நடந்தது. 


ALSO READ: viral video on Work From Home: வைரலாகும் சிறுமியின் வீடியோ


இதன் பின்னர் அவர் இந்த சம்பவம் குறித்து ஒரு புத்தகம் எழுதினார். இந்த புத்தகத்தின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் இதுவரை விற்கப்பட்டுள்ளன. 


பில் வைஸ் மரணத்தைப் பற்றி கூறுகையில், “நரகத்தில் வெப்பம் தாங்க முடியாததாக இருந்தது. நான் எப்படி உயிர்வாழ முடியும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நான் எப்படி இங்கு வந்தேன் என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன்” என்றார் பில். 


அசுரன் தன் நகங்களால் உடலை கிழித்தான் 


பில் நரகத்தில் தனியாக இல்லை. அவர் சிறைச்சாலையில் இரண்டு மாபெரும் அரக்கர்களை சந்தித்ததாகக் கூறினார். அவர்கள் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். 


“ஒரு அரக்கன் என்னை தூக்கி சிறைச்சாலையின் சுவரில் எறிந்தான். எலும்புகள் உடைந்ததைப் போல உணர்ந்தேன். மற்றொரு அரக்கன் தனது நகங்களால் என் மார்பைக் கிழித்தான்.” என்று பில் தனது திகிலான அனுபவத்தை விவரித்தார்.  


இந்த குழியில் ஆயிரக்கணக்கான மக்கள் அலறிக் கொண்டு விழுவதைக் கண்டதாக பில் கூறினார். 


“இதற்குப் பிறகு என் கண்கள் திடீரென விழித்துக்கொண்டன. ’அவரை நாம் மீட்டெடுத்து விட்டோம்’ என ஒரு மருத்துவர் கூறுவதை நான் கேட்டேன்” என்றார் பில்.


ALSO READ: Viral: நீச்சல்குளத்திற்குள் ஊர், அப்பார்ட்மெண்ட் கலக்கும் துபாய்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR