வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய காலகட்டத்தில் மக்கள் தொகை மிக அதிகமாக இருப்பதால் பலருக்கு பல வித பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பலர் நன்றாக படித்து பட்டம் பெற்றாலும் வேலை கிடைப்பதில்லை. ஆனால் ஒரு நாய் உட்கார்ந்த இடத்திலிருந்தே கோடிகளில் சம்பாதிக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? இது ஒரு சாதாரண நாய் அல்ல!! இது ஒரு கோடீஸ்வர நாய்!! ஆம், அதனிடம் மிக அதிக அளவில் பணம் இருப்பதால், தனது முதலாளியை இது தனது அகவுண்டண்ட் ஆக்கியுள்ளது. ஆனால் ஒரு நாய்க்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது? இந்த நாயின் முழு கதையையும் இங்கே தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | கூப்பிட்டு வச்சு அசிங்கபடுத்தறாங்க... கடுப்பில் நாய்குட்டி... குஷியில் முயல் குட்டிகள்!


கோடிகளில் சம்பாதிக்கும் நாய்


சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வரும் இந்த நாயின் பெயர் ப்ரூடி. கோல்டன் டூடுல் நாய் இனத்தைச் சேர்ந்த இந்த நாயின் வருமானம் கோடிக்கணக்கில் உள்ளதாக கூறப்படுகின்றது. இதன் வயது 4, ஆனால், தற்போது வரை இந்த நாய் மொத்தம் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது ரூ. 8 கோடியே 29 லட்சம் சம்பாதித்துள்ளது.


இந்த ப்ரூடி நாய்க்கு சமூக ஊடக தளமான டிக்டாக்கில் கணக்கு உள்ளது. இதற்கு 6 மில்லியன் அதாவது 60 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் உள்ளனர். ப்ரூடிக்கு அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கும் உள்ளது. அதில் அதற்கு ஒரு மில்லியன் அதாவது 10 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் உள்ளனர். இந்த நாய் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துள்ளது. 


ப்ரூடியின் உரிமையாளர் கிளிஃப். இந்த நாயின் உரிமையாளர் தன்னை தனது நாயின் மேலாளராக நியமித்துள்ளார். சமூக ஊடகங்களில் ப்ரூடியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். இதன் மூலம் இன்று ப்ரூடி கோடிகளை சம்பாதிக்கிறது.


லட்சாதிபதி நாய் ஹேர் கட் செய்துகொள்ள சென்ற வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டகிராமில் brodiethatdoodandfloofbybrodie என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸும் லைக்சும் கிடைத்துள்ளன.


காவல்துறையில் வேலை கிடைத்தது


ப்ரூடியின் சம்பாத்தியம் கோடிகளில் இருந்தாலும், அது வீட்டில் ஒன்றும் செய்யாமல் இருக்கவில்லை. அது தனக்கென ஒரு புதிய வேலையையும் பெற்றுள்ளது. இப்போது இந்த கோல்டன் டூடுல் நாய் மியாமி கடற்கரை காவல் துறையின் ஒரு அங்கமாக மாறியுள்ளது. சமீபத்தில் இந்த நாய் காவல்துறையில் அதிகாரப்பூர்வமாக உறுதிமொழியையும் எடுத்துள்ளது. தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த நாயும் போலீசாருடன் சென்று குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கவுள்ளது. இந்த நாயின் உரிமையாளர் அதன் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | Viral Video: தண்ணீருக்குள் சீறிப்பாயும் கழுகு... நொடியில் நடத்திய மீன் வேட்டை...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ