ஒரு அடி தூரத்தில் மரணம்; குடை உதவியால் உயிர் தப்பிய அமெரிக்க ஆண்!
அமெரிக்காவில் அட்ரியன் நகரில் மின்னல் தாக்கி ஒரு நபர் சிறு காயங்கள் இன்றி தப்பியுள்ள விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!
அமெரிக்காவில் அட்ரியன் நகரில் மின்னல் தாக்கி ஒரு நபர் சிறு காயங்கள் இன்றி தப்பியுள்ள விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!
அமெரிக்காவில் அமைந்துள்ளது அட்ரியன் என்னும் நகரம். கடந்த சில தினங்களாக இங்கு வானிலை மிகவும் மோசமாக உள்ளது. அதிகளவில் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் இந்த நகரை சேர்ந்த நபர் ஒருவர் சாலையில் குடையை பிடித்து நடந்து கொண்டிருந்தார். அவர் நடந்து கொண்டிருந்தபோது ஒரு அடி தள்ளி மின்னல் ஒன்று பலமாக தாக்கியுள்ளது. மிக அருகாமையிலேயே மின்னல் ஒன்று தாக்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரோமலஸ் கையில் வைத்திருந்த குடையை கீழே போட்டு நிலை தடுமாறினார்.
பின்னர் சுதாரித்து, குடையை எடுத்துக்கொண்டு அவ்விடத்தில் இருந்து புறப்பட்டார். அதாவது ஒரு அடி தூரத்தில் அதிர்ஷ்டவசமாக ரோமலஸ் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவமானது அருகில் இருந்த CCTV கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சியினை Romulus McNeill என்பவர் தனது முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 12 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.