Mrs Jill Biden & Mr Kamala Harris Liplock Kiss: காதலர் வாரத்தில், இன்று பிரபோஸ் டே எனப்படும் முன்மொழியும் நாள்! ஆனால், அதுக்காக இப்படியா? என்னம்மா இப்படி பண்றீங்களே! அமெரிக்க முதல் பெண்மணியின் ‘முத்த’ வீடியோவுக்கு வந்து குவியும் கமெண்டுகள் கலகலக்க வைக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று (பிப்ரவரி 7, 2023செவ்வாய்) இரவு அமெரிக்க அதிபர் ஜோ பிடென் தனது இரண்டாவது ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையை நிகழ்த்தினார், இது அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையை இழந்த பிறகு அவர் முதல் முறையாக உரையாற்றினார் என்பது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு.


அமெரிக்காவின் முதல் பெண்மணி


ஆனால், அதைவிட மற்றொரு விஷயம் சமூக ஊடகங்களில் கவனத்தைப் பெற்றது. அதிபர் ஜோ பிடனின் மனைவியும், அமெரிக்க முதல் பெண்மணியுமான ஜில் பிடன், செவ்வாய்க்கிழமையில் கேபிடல் ஹில்லில் ஸ்டேட் ஆஃப் யூனியன் உரைக்கு முன்னதாக, துணை அதிபர் கமலா ஹாரிஸின் கணவர் டக் எம்ஹாஃப் உதட்டில் முத்தமிட்டார்.


மேலும் படிக்க | Rose Day 2023: மலர் போல் மணக்கும் காதலுக்கு ஜே! ’ரோஸ் டே” கொண்டாடலையா?


வைரலாகும் அமெரிக்க அதிபரின் துணையின் முத்தம்


இந்த முத்தமிடப்பட்ட தருணத்தின் சில நிமிடங்களிலேயே, இருவரும் முத்தம் பகிர்ந்து கொண்ட தருணம் ட்விட்டரில் வைரலாக பரவியது. இந்தத் தருணம் இன்னும் ஒரு முறை வருமா?


அதிலும் ரோஸ் டே- உடன் தொடங்கிய காதலர் வாரத்தில், அனைவரும் காதலர்களை நோக்கி கவனத்தைக் குவித்து வரும் நிலையில், அசந்தர்ப்பமாக இட்ட முத்தம், அமெரிக்காவையே கலகலக்க வைத்துவிட்டது.



"ஜில் பிடன், கமலா ஹாரிஸின் கணவரின் உதட்டில் முத்தமிட்டார். அவர் வருவதைப் பார்க்கவில்லை" என்று ஒருவர் ட்விட்டரில் எழுதினார். "ஜில் பிடன் கமலாவின் கணவருக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்தாரா?!" என  மற்றொரு டிவிட்டர் பயனர் ஆச்சரியம் தெரிவிக்கிறார்.  


மேலும் படிக்க | நெஞ்சை உலுக்கும் வீடியோ: துருக்கி நிலநடுக்கம் - 22 மணிநேர போராட்டம்... பெண் மீட்பு


மேலும் படிக்க | துருக்கி சிரியா நிலநடுக்க பலி எண்ணிக்கை  அதிகரிப்பு! உதவிக்கு விரைந்த இந்தியா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ