புது டெல்லி: அகமதாபாத் நகர நரோடா தொகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பால்ராம் தவாணி ஒரு பெண்ணை தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நித்து தேஸ்வனி என்ற பெண் தண்ணீர் பற்றாக்குறை குறித்து புகார் அளிக்க பாஜக அலுவலகம் வந்துள்ளார். அப்பொழுது அந்த பெண்ணுக்கும் பாஜக நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டு உள்ளது. இதனையடுத்து பாஜக அலுவலகத்திற்கு வெளியே நடுரோட்டில் புகார் அளிக்க வந்த பெண்ணை முரட்டுத்தனமாக பாஜக எம்.எல்.ஏ. பல்ராம் தவானி மற்றும் அவரது ஆதரவாளர்கள் முரட்டுத்தனமாக தாக்கி உள்ளனர். அந்த பெண்ணின் கணவரையும் தாக்கி உள்ளனர். இதுகுறித்து காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானதால், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


 



இதுக்குறித்து தாக்கப்பட்ட பெண் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை தாக்கப்பட்டவர்கள் மீது எப்.ஐ.ஆர். பதுவு செய்யப்படவில்லை. 


சமூக ஊடகங்களில் வீடியோ வைரலானதை அடுத்து, பி.ஜே. எம்.எல்.ஏ. பாலிராம் தவாணி கூறியது, "எனது உணர்ச்சிகளைத் தூண்டியதால் அவ்வாறு நடந்துக் கொண்டேன். நான் செய்தது தவறு. எனது தவறை ஏற்றுக்கொள்கிறேன். நான் வேண்டுமென்றே இதை செய்யவில்லை. நான் கடந்த 22 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். ஆனால் இதுபோன்ற ஒரு சம்வம் நடந்தது இல்லை. அந்த பெண்னிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.