நவராத்திரி விழாவில் விவசாயிகள் போராட்டத்தின் காட்சிகள்: வைரலாகும் விழா வீடியோ
இந்த ஆண்டு துர்கா பூஜா கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, கொல்கத்தாவில் உள்ள ஒரு பண்டலில் நாட்டின் தற்போதைய முக்கிய பிரச்சினைகளை எடுத்துக்காட்டும் வகையில் உருவகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
கொல்கத்தா: நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டங்கள் துவங்கி விட்டன. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் நவராத்திரி ஒவ்வொரு விதத்தில் கொண்டாடப்படுகின்றது.
மேற்கு வங்கத்தில், நவராத்திரியில் (Navrathri) துர்கா பூஜா கொண்டாட்டம் மிக விசேஷமாக நடக்கும். இதில், பல்வேறு இடங்களில் பண்டல்கள் (பந்தல் போன்ற அமைப்பு) உருவாக்கப்பட்டு, அம்மனின் உருவச்சிலைகள், பிற தெய்வங்களின் உருவச்சிலைகள் அமைக்கப்பட்டு திருவிழா போல் கொண்டாடங்கள் நடக்கும்.
இந்த ஆண்டு துர்கா பூஜா கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, கொல்கத்தாவில் உள்ள ஒரு பண்டலில் நாட்டின் தற்போதைய முக்கிய பிரச்சினைகளை எடுத்துக்காட்டும் வகையில் உருவகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
விவசாயிகள் போராட்டத்தை (Farmers Protest) எடுத்துக்காட்டும் வகையில், விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அங்கு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. டம் டம் பார்க் பாரத் சக்ரா பண்டலில், இந்த காட்சிகளை அமைக்க காலணிகள் பிரதானமாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
பந்தலின் நுழைவாயிலில் சிறிய காகிதத் துண்டுகளில் போராட்டக்காரர்களின் பெயர்களைக் கொண்ட பெரிய இறக்கைகளுடன் இணைக்கப்பட்ட டிராக்டர் உள்ளது. விவசாயிகள் பறந்து தங்கள் இலக்கை அடைய வேண்டும் என்ற கருத்தை இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
ALSO READ: நவராத்திரி நோன்பு: கலசம் ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம் எது
பல தேய்ந்த மற்றும் கிழிந்த காலணிகள் ஒரு பக்கத்தில் ஒரு குவியலாக கிடந்தன. பந்தலின் உள் சுவரில் கால்தடங்கள் போல அவை ஒட்டிக்கொண்டிருந்தன, பலத்தின் பிரயோகத்தால் சிதறிய ஒரு கூட்டத்திற்கு சாட்சியாக இது இருந்தது. இந்த காட்சிகளில், சுவர்களில் 3 டி மற்றும் 4 டி ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ளன.
இரண்டு உண்மையான டயர்களுடன் இணைக்கப்பட்ட ஒரு அச்சிடப்பட்ட கார் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. உத்தர பிரதேசத்தின் லகீம்பூர் கெரியின் (Lakhimpur Kheri) சமீபத்திய சம்பவத்தை எடுத்துக்காட்டும் வகையில் இது உள்ளது. விவசாயிகள் மீது கார் ஏறும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் அதன் உற்பத்தியையும் சித்தரிக்கும் துர்க்கை சிலை வைக்கப்பட்டுள்ள பந்தலின் பிரதான பகுதியில் ஒரு நெல் வயல் காட்டப்பட்டுள்ளது. துர்கா பூஜை அனைத்து சமூகங்களுக்குமான பண்டிகை என்பதையும் இது குறிக்கிறது. மேலும், விவசாயிகளின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு கால்களுக்கு அடியில் நசுக்கப்படுகின்றன என்பதை விவரிக்கும் வகையில், பல விவசாயிகளின் முகங்களை தாங்கிய ஒரு பெரிய கால் காட்டப்பட்டுள்ளது.
இந்த பந்தலில் மேலும் சில படங்களை இங்கே காணலாம்:
ஏஎன்ஐ -யிடம் பிரத்யேகமாகப் பேசுகையில், பாரத் சக்ரா டம் டம் பார்க் பூஜை பந்தலின் பொதுச் செயலாளர் பிரதீக் சவுத்ரி, "இதற்குப் பின்னால் எங்களுக்கு எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை.இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் விவசாயிகள் போராட்டம் பற்றி பேசப்படுகின்றது. இதை கருப்பொருளாக கொள்ள வேண்டும் என செப்டம்பர் மாதத்திலேயே நாங்கள் முடிவு செய்தோம். இந்த பந்தல் மூலம் நாங்கள் சமூக செய்திகளை வழங்க விரும்புகிறோம்." என்று கூறினார்.
இந்த பந்தகின் வீடியோவை இங்கே காணலாம்:
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR