சமூக வலைத்தளங்களில் செல்லப் பிராணிகள் மற்றும் பறவைகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாக பறவைகள் பறக்கும் போது தனியாக பறக்கும் அல்லது கூட்டம் கூட்டமாக பறந்து செல்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஒரு பறவையின் மீது மற்றொரு பறவை அமர்ந்து பயணிக்கிறது. வேடிக்கையான சம்பவமாக இருந்தாலும் கேமராவில் சிக்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நீ பாம்போ பல்லியோ எங்கிட்ட வம்பு வச்சுக்காத! பாம்பை பதம் பார்த்த பூரான் வீடியோ


பார்த்த அனைவருமே அதிசயம் என வியக்கின்றனர். ஏனென்றால் இதுபோன்ற பறவைகளின் தோஸ்து சம்பவங்கள் எல்லாம் எப்போதாவது ஒருமுறை தான் அனைவரின் கண்களிலும் படும். அதுவும் வீடியோவாக கிடைப்பது எல்லாம் அரிதினும் அரிதான விஷயம். இப்போது கிடைத்திருக்கிறது என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். இணையத்தில் வைரலாகியிருக்கும் இந்த வீடியோ மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.


அதில் ஒரு கடல் பறவை பறந்துகொண்டிருக்க அதன் முதுகில் மற்றொரு பறவை ஓய்யாரமாக சிறுது நேரம் ஓய்வெடுத்து கொண்டிருக்கிறது. ஏதோ போருக்குபோகும்போது தளவாடங்களையெல்லாம் பீரங்கி சுமந்து கொண்டு செல்வதுபோல அந்த பறவைகள் பறந்து வருவதை பார்க்கும்போது தோன்றுகிறது. என் முதுகில் ஏறி நீ சண்டை செய், நான் உனக்காக இருக்கிறேன் என்ற வசனங்களையெல்லாம் படத்தில் கேட்டிருப்போம். பறவைகளின் இந்த வீடியோ பார்க்கும்போது, அந்தளவுக்கான தோஸ்து காண்போரை சிலிர்க்க வைக்கிறது. பறவைகளுக்கு இயல்பாகவே இந்த குணாதிசியம் உண்டா என்பது தெரியவில்லை என்றபோதும் ஒரு பறவை மீது மற்றொரு பறவை ஓய்யாரமாக பறக்கும் இந்த காணொளி காண்பதற்கு ரம்யமாகவே இருக்கிறது.



மேலும் படிக்க | ஜாலியா ஊரைச் சுத்திப் பார்க்கும் வால் பையன்! ரவுண்ட்ஸ் போகும் கோழி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ