நீ பாம்போ பல்லியோ எங்கிட்ட வம்பு வச்சுக்காத! பாம்பை பதம் பார்த்த பூரான் வீடியோ

python getting wound by centipedes: படையையும் நடுங்க வைக்கும் பாம்பையே பதம் பார்க்கும் பூரான் கொடுக்கும் அதிர்ச்சி வைத்தியம் வீடியோ வைரல்  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 29, 2023, 08:18 PM IST
  • அடிபட்ட பாம்பு சும்மா விடுமா?
  • பீதி கிளப்பும் பாம்பு சண்டை வீடியோ
  • பாம்பையே பதம் பார்த்த பூரான் கொடுக்கு
நீ பாம்போ பல்லியோ எங்கிட்ட வம்பு வச்சுக்காத! பாம்பை பதம் பார்த்த பூரான் வீடியோ  title=

இன்றைய டாப் வைரல் வீடியோ: பரபரப்பாக நமது வாழ்க்கையில் மனதை லேசாக்கும் சக்தி சமூக ஊடகங்களுக்கு உண்டு. சமூக ஊடகங்களில் வெளியாகும் பல்வேறு செய்திகள் அறிவுக்கு தீனி போட்டாலும், சில மனதிற்கு இதமளிக்கின்றன. சில செய்திகள் மனதை வருத்துகின்றன என்றால், பல உபயோகமான தகவல்களாக இருக்கின்றன. இப்படி, சமூக ஊடகத்துடன் நமது வாழ்க்கை பின்னிப்பிணைந்துவிட்டது.

இணையதளம் ஒரு தனி உலகமாக இயங்கி வந்தாலும், அவை மனிதர்களின் விருப்பத்தை சார்ந்தே இருக்கிரது. மக்களை தனது போதைக்கு அடிமையாக்கி இருக்கும் சமூக ஊடகங்கள், நமது வாழ்க்கையில் பெரிய அளவில் இடம் பிடித்துள்ளது. ஏனெனில் பலவித வியக்க வைக்கும் விஷயங்களை பற்றி தெரிந்துகொள்வதுடன், உபயோகமான பலவற்றையும் தெரிந்துக் கொள்கிறோம்.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல தகவல்களை வழங்கி வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் மனதை லேசாக்கும் வீடியோக்களும் நமக்கு போதையை ஏற்றுகின்றன. ஆனால், மறுபுறம் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் உதவுகின்றன என்றல் அது மிகையாகாது.

மேலும் படிக்க | Viral Video: என்ன வாய்ம்மா உனக்கு... இந்த வாயாடி கிளியை பேசி ஜெயிக்கிறது கஷ்டம் தான்!

அதிலும் வன விலங்குகளின் வீடியோக்களை பார்கக் என பிரத்யேகமானரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் பாம்புகள் வீடியோவுக்கு எப்போதுமே மவுசு அதிகம். பாம்புகள் உலகம் முழுவதும் காணப்பட்டாலும், பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்று சொல்வார்கள்.

பாம்புகள் மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருப்பதற்கு காரணம், அவற்றின் நச்சு தான். பாம்பின் விஷம் பட்டாலே உயிர் துறக்கும் உயிரினங்களும் உண்டு. அதனால் தான், அச்சமளிக்கும் பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு தனி விருப்பம் இருக்கிறது.

பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு பாம்பு வீடியோ வைரலாகி வருகின்றது. இந்த பாம்பு வீடியோ அப்படி என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்களா? முதலில் இந்த வீடியோவைப் பாருங்கள். பிறகு உங்களுக்கே காரணம் புரிந்துவிடும்.

பார்த்தாலே பயம் தரும் வீடியோவில், நாம் தினசரி பார்க்கும் பூரான், பாம்பை படுத்தும் பாடு எப்படி இருக்கிறது? பாம்பையே பதுங்க வைக்கும் வீரியம் கொண்டது பூரான் என்பதை தெரிந்துக் கொண்ட பிறகு, பூரானை பார்த்தாலும் பயம் வரும் தானே?

பாம்பை பதம் பார்த்த பூரான் வீடியோ  

மனிதர்களை அதிக அளவில் அச்சப்படுத்தும் பாம்புகள் இல்லாத இடமே உலகில் இல்லை என்று சொல்லலாம். படையையும் நடுங்க வைக்கும் பாம்பையே பதம் பார்க்கும் பூரான் கொடுக்கும் அதிர்ச்சி வைத்தியம்  

வைரலாகி வரும் வீடியோவில், பாம்புக்கும், பூரானுக்கும் யார் முதலில் யாரைத் தாக்குவது என்ற தள்ளுமுள்ளு போராட்டத்தில், பூரானிடம் பாம்பின் தந்திரம் பலிக்கவில்லை என்பது ஆச்சரியம் மட்டுமல்ல அதிர்ச்சியும் அளிக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதற்கு பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.) 

மேலும் படிக்க | மனிதர்களை ரொம்ப நம்புறீங்கப்பா! மான்களை கலாய்க்கும் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News