Video: நயன்தாரா, விக்னேஷ் சிவன் பொற்கோவிலில் தரிசனம்!
நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது!
நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது!
தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் காதல் பற்றி கிசுகிசு-க்கள் வந்த வண்னம் உள்ளது. இதனை நிறுபிக்கும் வகையில் இவர்கள் இருவரும் அவ்வப்போது ஜோடியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது இந்த ஜோடி பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவில் தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இப்புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
முன்னதாக விநாயகர் சதூர்த்தி கொண்டாடுவது போன்ற புகைப்படங்களை இருவரும் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இருவரும் ஒன்றாக அமர்ந்து ரொட்டி உண்ணுகின்றனர். தரிசனத்திற்கு பின்னர் இந்த காட்சிகள் படம் பிடிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.