குழந்தைகள் செய்யும் சுட்டித்தனங்களுக்கு அளவே இருக்காது. அவர்கள் செய்யும் சின்ன சின்ன சேட்டைகள் பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கும். அந்த நொடி அவர்களின் சேட்டை கொஞ்சம் கடுப்பாக இருந்தாலும், அந்த நிகழ்வை நினைத்து பின்னர் சிரித்துக் கொண்டே இருக்கலாம். ஏனென்றால் அவர்கள் செய்யும் விஷயம் எந்த விரோதமும் இல்லாமல் குழந்தை தனமாக செய்வார்கள். அந்த நேரத்தில் அவர்கள் முகத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் குழந்தை தனத்தின் உச்சமாகவும், என்ன செய்திருக்கிறோம் என்று அறியாதவர்களாகவும் இருப்பார்கள். வேண்டுமென்று எதுவும் செய்திருக்க மாட்டார்கள். அப்படி ஒரு குழந்தை வீடியோ தான் இப்போது வைரலாகியுள்ளது. அந்த குழந்தை டீச்சருக்கே சம்பவம் செய்திருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சீண்டிய பெண்ணை வெச்சி செஞ்ச யானை: பதற வைக்கும் வைரல் வீடியோ


வைரலாகியிருக்கும் அந்த வீடியோ பிளே ஸ்கூல் ஒன்றில் நடைபெற்றிருக்கிறது. குழந்தைகள் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது டீச்சர் மற்ற வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அவரது நாற்காலிக்கு அருகிலும் ஒரு குழந்தை விளையாடுகிறது. வேலையை முடித்துவிட்ட டீச்சர் பின்னர் நாற்காலியில் அமரலாம் என நினைக்கும் சமயத்தில், நாற்காலிக்கு அருகில் இருந்த குழந்தை, அந்த நாற்காலியை நகர்த்திவிட்டு ஓடிவிடுகிறது. இதனால் உட்கார நினைத்த டீச்சர் நாற்காலி இல்லாமல் கீழே விழுகிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. 



டிவிட்டரில் பகிரப்பட்டிருக்கும் குழந்தையின் இந்த வீடியோ 35 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருக்கிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் குழந்தையின் செய்கையை நினைத்து வயிறு குலுங்க சிரிக்கின்றனர். பிளே ஸ்கூல் டீச்சரை குழந்தை பழிவாங்கிவிட்டதாக ஒரு நெட்டிசன் கமெண்ட் அடித்திருக்கிறார். மற்றொருவர், நாற்காலியை குழந்தை காப்பாற்றிவிட்டது என கூறியுள்ளார். அந்த டீச்சர் இந்த சின்ன நாற்காலியில் உட்கார்ந்தால் உடைந்துவிடும் நல்ல எண்ணத்தில் அந்த குழந்தை நாற்காலியை நகர்த்தியிருக்கிறது என இன்னொரு நெட்டிசன் கூறியுள்ளார். வீடியோ பார்த்தவர்கள் அனைவரும் குழந்தையின் சேட்டையை எண்ணி எண்ணி சிரித்துக் கொண்டிருக்கின்றனர்.      


மேலும் படிக்க | செல்ஃபி எடுத்த பெண்ணின் டி-ஷர்டை இழுத்த கரடி: ஷாக் தரும் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ