வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
இணையத்தில் விலங்குகளின் வீடியோகளுக்கென ஒரு தனி கிரேஸ் உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் அருகில் சென்று பார்க்க முடியாத பல வித சுவாரசியமான விஷயங்களை நாம் சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்கள் மூலம் காண முடிகின்றது. விலங்குகளை பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கும் பல விஷயங்களுக்கு ஒரு சான்றாக இந்த வீடியோக்கள் அமைகின்றன. உதாரணமாக, யானைகள் எவ்வளவு விசாலமாக தோற்றமளிக்கின்றனவோ, அதேபோல் அவை அதிக சக்திவாய்ந்தவை, புத்திக்கூர்மை உடையவை.
யானையின் புத்திசாலித்தனத்துக்கு சான்றாக தற்போது ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. யானைகள் பெரும்பாலும் மனிதர்களிடம் நட்புடன் பழகுகின்றன. ஆனால், இவற்றை நாம் சீண்டினாலோ, கிண்டல் செய்தாலோ, இவற்றின் கோவத்திலிர்ந்து நம்மால் தப்பிக்க முடியாது. அப்படி ஒரு சம்பவம் தான் இந்த வீடியோவிலும் காணபடுகின்றது.
யானைக்கு வாழைப்பழம் கொடுக்க சென்ற பெண்ணை திடீரென யானை தாக்குவது போன்ற நெஞ்சை பதற வைக்கும் காட்சி இந்த வீடியோவில் காணபடுகின்றது. ஆனால், பெண்ணின் மீதும் தவறு உள்ளது. எனினும், யானை பெண்ணை மிகவும் வலுவாக தாக்கியது. இந்த வீடியோவை பார்க்கும் யாரும் இதை பார்த்து அச்சப்படாமல் இருக்க முடியாது. யானையை அடுத்தமுறை பார்க்கும்போது கண்டிப்பாக இந்த வீடியோ நினைவுக்கு வரும். யானையிடம் சில்மிஷம் செய்ய நினைப்பவர்களுக்கும் இந்த சம்பவம் கண்டிப்பாக ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.
அப்படி என்னதான் நடந்தது?
வீடியோவில் ஒரு பெண் வாழைப்பழங்களைக் கொண்டு யானையை தன் பக்கம் இழுக்க முயற்சிப்பதைக் காண முடிகின்றது. ஒரு வாழைப்பழத்தை யானைக்கு முன்னால் அவர் நீட்டுகிறார். அதை அந்த யானை சாப்பிட முற்படும்போது அதை தன் பக்கமாக இழுத்துக்கொள்கிறார். இப்படி அவர் மீண்டும் மீண்டும் செய்கிறார். ஆனால், யானை பெண்ணின் இந்த செயலால் மிகவும் கடுப்பாகிறது. அந்த பெண்ணே எதிர்பார்க்காத வண்ணம் அந்த யானை தன் தும்பிக்கையால் அவரை தள்ளி விடுகின்றது. யானை தள்ளிவிடும் வேகத்தை பார்த்தால், பெண்ணுக்கு பலமான காயங்கள் ஏற்பட்டிருக்கும் போல் தெரிகிறது. எனினும், யானை பெண்ணை தள்ளிவிடும் காட்சியோடு வீடியோ நிறைவடைகிறது.
மேலும் படிக்க | செல்ஃபி எடுத்த பெண்ணின் டி-ஷர்டை இழுத்த கரடி: ஷாக் தரும் வைரல் வீடியோ
பீதியை கிளப்பும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:
You can’t fool an elephant even though he is tamed. They are one of the most intelligent animals to be in captivity. pic.twitter.com/rQXS6KYskN
— Susanta Nanda (@susantananda3) April 27, 2023
வீடியோ வைரல் ஆனது
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதை இந்திய வன சேவை அதிகாரி (ஐஎஃப்எஸ்) சுஷாந்த் நந்தா ஏப்ரல் 27 அன்று ட்விட்டரில் வெளியிட்டார். இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
இந்த யானையும் வைரல் ஆனது
சில நாட்களுக்கு முன்னர் மற்றொரு யானையும் வைரல் ஆனது. ஆனால், இது வேறு காரணத்திற்கான இணையவாசிகளின் இதயங்களை கவர்ந்தது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் யானை ஒன்று படம்பிடிக்கப்பட்டுள்ள வீடியோ ஒன்று சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்த வீடியோவை உள்ளடக்கத்தை உருவாக்கிய வைஷ்ணவி நாயக் இதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். வீடியோவின் துவக்கத்தில், வைஷ்ணவி நடனமாடுவதைக் காண முடிகின்றது. அப்போது எதிரே நிற்கும் யானையை நோக்கி கேமரா செல்கிறது. அந்த யானையும் வைஷ்ணவி போலவே தலையை ஆட்டி ஆடுவதை வீடியோவில் காண முடிகின்றது. யானை ஆடும் கியூட் வீடியோ மிக அழகாக உள்ளது. யானையின் அழகு டான்சை இங்கே காணலாம்.
மேலும் படிக்க | சோறு கொடுக்க போன இடத்தில குத்தாட்டம் போட்ட சொமேட்டோ ஊழியர்: Viral Video