செல்ஃபி எடுத்த பெண்ணின் டி-ஷர்டை இழுத்த கரடி: ஷாக் தரும் வைரல் வீடியோ

Shocking Viral Video: சமீபத்தில் ஒரு பெண் செல்ஃபி எடுக்கும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அவர் யாருடன் செல்ஃபி எடுக்கிறார் என்பதில்தான் ட்விஸ்ட் உள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 28, 2023, 03:21 PM IST
  • வீடியோவில், செல்ஃபி எடுக்கும் போது, ​​சிறுமி கரடியின் கூண்டுக்கு மிக அருகில் வருவதை காண முடிகின்றது.
  • கூண்டில் இருக்கும் கரடி தனது கையை இரும்பு கம்பிகளில் இருக்கும் இடைவெளி வழியாக வெளியே விட்டு, சிறுமியின் டி-ஷர்டை இழுக்கிறது.
  • இதனால் பெண் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகிறார்.
செல்ஃபி எடுத்த பெண்ணின் டி-ஷர்டை இழுத்த கரடி: ஷாக் தரும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

இந்த நாட்களில் செல்ஃபி மோகம் இளைஞர்களிடையே வேகமாக அதிகரித்து வருகிறது. ஆபத்தான இடங்களில் நின்று செல்ஃபி எடுப்பது மட்டுமின்றி, பல பிரபலங்களுடனும் இளைஞர்கள் செல்ஃபி எடுப்பதை காண முடிகின்றது. செல்ஃபி எடுக்கும்போது நடக்கும் பல வினோதமான சம்பவங்களின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. 

சமீபத்தில் ஒரு பெண் செல்ஃபி எடுக்கும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அவர் யாருடன் செல்ஃபி எடுக்கிறார் என்பதில்தான் ட்விஸ்ட் உள்ளது. ஆபத்தான விலங்குகளுக்கு இடையே செல்ஃபி எடுப்பது போல் வீடியோவில் காணப்படுகிறது. எனினும், பயங்கரமான விலங்குகள் அனைத்தும் வலுவான இரும்பு கம்பிகளுக்கு பின்னால் சிறை வைக்கப்பட்டது சற்று நிம்மதி அளிக்கிறது.

செல்ஃபி எடுக்கும் ஆசையில் பெரிய விபத்தில் சிக்கவிருந்த அந்த பெண் சரியான நேரத்தில் காப்பாற்றப்பட்டார். கொடூரமான சிங்கம் மற்றும் ராட்சத கரடி ஆகிய விலங்குகளின் கூண்டுகளுக்கு முன்னால் அந்த பெண் செல்ஃபி எடுக்க முயன்றார். வனவிலங்குகளுடன் படம் எடுக்க அனைவரும் விரும்புகின்றனர். ஆனால், அப்படிப்பட்ட நேரங்களில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதில் கவனம் சிதறினால், சில சமயம் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். 

இந்த பெண்ணுடனும் அப்படி ஒரு விஷயம் தான் நடந்தது. பெண் செல்ஃபி எடுக்கும் போது கரடியின் கூண்டுக்கு மிக அருகில் சென்றுவிட்டார். 

செல்ஃபியால் உயிருக்கு வந்த ஆபத்து

இந்த வீடியோவில், செல்ஃபி எடுக்கும் போது, ​​சிறுமி கரடியின் கூண்டுக்கு மிக அருகில் வருவதை காண முடிகின்றது. கூண்டில் இருக்கும் கரடி தனது கையை இரும்பு கம்பிகளில் இருக்கும் இடைவெளி வழியாக வெளியே விட்டு, சிறுமியின் டி-ஷர்டை இழுக்கிறது. இதனால் பெண் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகிறார். பின்னர் அங்கிருக்கும் ஒருவர் அந்த பெண்ணை அங்கிருந்து தூரமாக செல்ல உதவுகிறார். 

மேலும் படிக்க | சோறு கொடுக்க போன இடத்தில குத்தாட்டம் போட்ட சொமேட்டோ ஊழியர்: Viral Video

மனதை பதற வைக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

(@_hasret_kokulum_)

சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவை பலர் தங்கள் பக்கங்களில் பகிர்ந்து, இப்படி அலட்சியமாக இருக்க வேண்டாம் என அனைவருக்கும் அறிவுரை வழங்கி வருகின்றனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் _hasret_kokulum_ என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்த வீடியோ, பெரும்பாலான பயனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனதை உலுக்கும் இந்த காணொளியில், ஒருவரின் சிறு தவறு அவரை எப்படி பாதிக்கும் என்பதை கண்கூடாக பார்க்க முடிகின்றது.  தற்போது, ​​செய்தி எழுதும் நேரம் வரை சமூக ஊடகங்களில் 4.7 மில்லியனுக்கும் அதிகமான முறை இந்த வீடியோ பார்க்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தவறுகளை மீண்டும் யாரும் செய்ய வேண்டாம் என்று பயனர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | திடீரென தாக்கிய இறந்த முதலை, அரண்டு ஓடிய மக்கள்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News