இன்றைய வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.  தற்போது ஒரு வித்தியாசமான வீடியோ வைரலாகி வருகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிகவும் வேடிக்கையாக இருக்கும் இந்த வீடியோ பல்வேறு சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோ போதையில் இருக்கும் நபரை தொடர்புடையது போல் தெரிகிறது. இதில் நடப்பதைப் பார்த்து நீங்கள் கட்டாயம் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள். இந்த வீடியோ நெட்டிசன்களை வெகுவாக அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுவரை மில்லியன் கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது. அந்த வகையில் பொது இடத்தில் அத்துமீறி நடக்கும் சில சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், அதேபோன்ற ஒரு பரபரப்பான வீடியோ தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. 


மேலும் படிக்க | உயிரை பணயம் வைத்து ஒரு போட்டோஷூட்: கடுப்பாகி கமெண்ட் செய்த நெட்டிசன்ஸ்.... வைரல் வீடியோ


இந்த நிலையில் குருகிராம் சாலையில் நபர் ஒருவர் தனது நண்பர்களுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை நாம் காணலாம். மதுபோதையில் இருந்த இவர்கள், திடீரென ஓடும் காரின் ஜன்னல் வழியாக வெளியேறி கூரையின் மேல் ஏறிக்கொண்டனர். கூரையின் மேல் பயணித்துக்கொண்டே மது குடித்து கலாட்டா செய்தனர். அத்துடன், இதில் ஒருவர் போதையில் கூரையின் மேலே புஷ் அப் எடுத்து உடற்பயிற்சி மேற்கொண்டார். இவர்கள் சென்ற காரும் தறிக்கெட்டு ஓடியது.


கதிகலங்க செய்த இந்த சேட்டைகளை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து காவல்துறை கார் எண்ணைக் கொண்டு அடையாளம் கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட நபர்களை பிடித்து விசாரித்தனர். அதன்படி, காரில் நான்கு பேர் பயணித்த நிலையில், அத்துமீறலில் ஈடுபட்ட தயா சந்த் மற்றும் சுராஜ் என்ற இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், காரின் உரிமையாளருக்கு ரூ.6,500 அபராதம் விதித்தனர் ஹரியானா காவல்துறை.


கதிகலங்க வைக்கும் வீடியோவை இங்கே காணுங்கள்:



இந்த வைரலான வீடியோவை Pradeepdubey என்பவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு தளங்களில் வேகமாகப் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோ இதுவரை ஏகப்பட்ட லைக்குகளையும் வியூஸ்களையும் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் கடுமையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | இந்த பாம்புக்கு சொகுச பாத்திங்களா.. பார் மேனஜர் அலறல்: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ