Video: பொதுத்தேர்வை ரத்து செய்ய சோனு சூத் வலியுறுத்தல்!
கோவிட் 19 தொற்றுக்கள் அதிகரித்து வருவதால் சிபிஎஸ்இ 10,12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு 2021 ஐ ரத்து செய்யக் கோரி சோனு சூத் வீடியோ மூலம் வலியுறுத்தியுள்ளார்.
கோவிட் 19 தொற்றுக்கள் அதிகரித்து வருவதால் சிபிஎஸ்இ 10,12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு 2021 ஐ ரத்து செய்ய பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாணவர்களின் பல பெற்றோர்களும் சிபிஎஸ்இ வாரிய தேர்வு 2021 (CBSE Board exams) ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்லைன் முறையில் நடத்த வேண்டும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தையும் அரசாங்கத்தையும் கோரி மாணவர்கள் ஆன்லைன் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
திட்டமிடப்பட்ட சிபிஎஸ்இ (CBSE) போர்டு தேர்வு குறித்து மாணவர்கள் 'cancelboardexams2021' என்ற ஹேஷ்டேக் மூலம் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும், அந்த அறிக்கையின்படி, சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு போர்டு தேர்வு 2021 மே 4 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ | CBSE Board Exams 2021: பொது தேர்வுகளை ரத்து செய்ய வலுக்கும் கோரிக்கை
இதற்கிடையில் cancelboardexams2021 என்ற ஹேஸ்டேகுக்கு ஆதரவு தெரிவித்து திரைப்பட நடிகர் சோனு சூத் (Sonu Sood) மாணவர்களை ஆதரிக்கும் வீடியோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்., ஆஃப்லைன் தேர்வுகள் எடுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் நான் ஆதரவளிக்கிறேன். உலகின் பல நாடுகளில் 600 க்கும் மேற்பட்ட கோவிட் (COVID-19) தொற்றுக்கள் இருந்த நிலையிலும், தேர்வுகள் அங்கு ஒத்திவைக்கப்பட்டன என்று அவர் கூறினார். இந்தியாவில் ஒரு நாளில் ஒரு லட்சம் 45 ஆயிரம் தொற்றுக்கள் பதிவாகி வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், தேர்வுக்கான பிற வழிகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
பல மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன
கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, டெல்லி உட்பட பல மாநிலங்களில் உள்ள பள்ளிகள் அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்பட்டுள்ளன. கொரோனா தொற்று காரணமாக, மத்தியப் பிரதேசம் உட்பட பல மாநிலங்களின் மாவட்டங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் தொற்றுக்களுக்கு மத்தியில் மத்திய பிரதேசத்தில் போர்டு தேர்வுகளுக்கும் அட்மிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR