CBSE Board Exams 2021: பொது தேர்வுகளை ரத்து செய்ய வலுக்கும் கோரிக்கை

"Cancelboardexams2021" என்ற ஹேஷ்டேக் இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களில்  ட்ரெண்டிங் செய்யப்பட்டது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 10, 2021, 03:55 PM IST
  • 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மனுக்களில் கையெழுத்திட்டுள்ளனர்.
  • நாடு முழுவதும் தேர்வு மையங்கள் 40-50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • பல ஆசிரியர்களும் பொது தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என கோருகின்றனர்.
CBSE Board Exams 2021: பொது தேர்வுகளை ரத்து செய்ய வலுக்கும் கோரிக்கை title=

கோவிட் -19  தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மே மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்லைன் முறையில் நடத்த வேண்டும் என்று  வலியுறுத்தி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும்  மேற்பட்ட மாணவர்கள் மனுக்களில் கையெழுத்திட்டுள்ளனர். "Cancelboardexams2021" என்ற ஹேஷ்டேக் இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களில்  ட்ரெண்டிங் செய்யப்பட்டது

2021  ஆண்டிற்கான சிபிஎஸ்இ  (CBSE) பொதுத் தேர்வுகள் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கும் குறைவான கால அவகாசம் உள்ள நிலையில், பல மாணவர்களும் ஆசிரியர்களும் பொது தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என கோருகின்றனர். 

பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதிலளித்த மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), பொதுத் தேர்வுகள் 2021 திட்டமிட்டப்படி நடத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தியது. 2021 மே 4 முதல் பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. 

தேர்வு மையங்களில் COVID-19  தொற்றிலிருந்து பாதுகாக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும்  சிபிஎஸ்இ  உறுதியளித்துள்ளது. சமூக இடைவெளியை பின்பற்ற ஏதுவாக தேர்வு மையங்களின் எண்ணிக்கையை 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ வெளியிட்ட அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை, "கொரோனா தொற்று காரணமாக பிராக்டிகல் தேர்வில் பங்கேற்க முடியாமல் போன மாணவர்களுக்கு, ஜூன் 11ம் தேதிக்கு முன்னர் மீண்டும் தேர்வு நடத்தவும் அறிவுறுத்தியுள்ளது.   

கோவிட்  தொடர்பான வழிகாட்டுதல்கள் நடைமுறையில் இருப்பதால், நாடு முழுவதும் தேர்வு மையங்கள் 40-50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பிராக்டிகல், அதாவது நடைமுறை தேர்வில் பங்கேற்முடியாத மாணவர்களுக்கு, மீண்டும் பள்ளிகள் வாய்ப்பை ந்வழங்க வேண்டும் எனவும்  சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது. 
இந்தியாவில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக 1.31 லட்சம் புதிய கோவிட் -19  பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதில் மகாராஷ்டிராவில் மட்டும் தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது.   நாட்டில்  தொடர்ந்து மூன்றாவது நாளாக, அதிக எண்ணிக்கையிலான வழக்குகளின் தொடர்ச்சியான மூன்றாவது நாளாகும், கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோயால் மேலும் 780 இறப்புகள் பதிவாகியுள்ளன.

ALSO READ | RSS தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா தொற்று

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News