நயன்தாராவின் தமிழ் சினிமாவில் ல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக உள்ளார். இவரது கைவசம் தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விக்னேஷ் சிவனுடன் (Vignesh shivan) காதல் வயப்பட்டு இருக்கும் நயன்தாரா (Lady superstar Nayanthara) , கடந்த ஆண்டு விக்னேஷ் சிவனின் தயாரிப்பின் நெற்றிக்கண் (Netrikann) என்ற படத்தில் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு மிகுந்த அளவில் எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்த படத்தை அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்குகிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு கிரிஷ் இசையமைக்கிறார். திலீப் சுப்ராயன் ஸ்டண்ட் இயக்கம் செய்கிறார். லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்கிறார். இந்த படத்திற்கு கிரிஷ் இசை அமைத்துள்ளார். 


ALSO READ | விரைவில் முக்கிய அறிவிப்பு, நயன்தாரா - விக்னேஷ் சிவன் அதிரடி முடிவு


2011-ல் தென்கொரியாவில் வெளியான Blind திரைப்படத்தை தழுவி நெற்றிக்கண் படம் எடுக்கப்பட்டுள்ளது. விபத்தில் பார்வையை இழக்கும் பெண் போலீஸ் அதிகாரி எப்படி ஒரு சைக்கோ கொலைகாரனை துப்பறிந்து கண்டுபிடிக்கிறார் என்பது கதை.


இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள, இதுவும் கடந்து போகும் எனத் தொடங்கும் பாடலை சோனி நிறுவனம் வெளியிட்டுள்ளது. சித் ஸ்ரீராம் பாடியிருக்கும் இந்தப் பாடலை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். பாடல் வெளியானதைத் தொடர்ந்து நயன்தாரா ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றது.



ALSO READ | நயன்தாராவின் நெற்றிக்கண்: விக்னேஷ் சிவன் அளித்த லேட்டஸ்ட் அப்டேட் இதொ!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR