விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் உருவாகி வரும் '96' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "இரவிங்கு தேவை" பாடலின் லிரிக்கல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

`நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் 96. இப்படத்தில் திரிஷா மற்றும் விஜய் சேதுபதி முதல் முறையாக ஜோடியாக நடிக்கின்றனர். 


காதலை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் விஜய்சேதுபதி அவர்கள் 16 வயது, 36 வயது மற்றும் 96 வயது என மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 


இப்படத்தில் ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முன்னதாக இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள "இரவிங்கு தேவே" என்னும் பாடலின் லிரிக்கல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.



உமா தேவி இப்பாடலுக்கு வரிகலை எழுத, சின்மயி மற்றும் ப்ரதீப் குமார் பாடியுள்ளனர்.