லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இந்த படம் ஜனவரி 13-ம் தேதி அனைத்து மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையையும் லலித் குமார் கைப்பற்றியுள்ளார். தற்போது படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் மும்முரமாக பணிபுரிந்து வருகிறது படக்குழு. தினமும் ஒவ்வொரு கதாபாத்திரத்தை முன்வைத்து ப்ரோமோ வெளியிட்டு வருகிறார்கள்.


ALSO READ | Breaking: இந்த தேதியில் விஜய் மாஸ்டர் வெளியீடு - ஆனால் ....


இந்நிலையில், திடீரென்று இன்று (ஜனவரி 11) மாலையில் 'மாஸ்டர்' (Masterகாட்சிகள் இணையத்தில் லீக்கானது. அதில் காரில் நாசருடன் விஜய் (Vijayபேசிக் கொண்டு வரும் காட்சியும், அர்ஜுன் தாஸுடன் விஜய் சட்டையின்றி அமர்ந்து பேசி வரும் காட்சியும் வெளியாகியுள்ளது. இந்த காட்சிகள் எவ்வாறு லீக்கானது என்று படக்குழுவினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 


சுமார் ஒன்றரை ஆண்டுகள் உழைப்பு தயவு செய்து யாரும் அக்காட்சிகளைப் பகிர வேண்டாம், இன்னும் ஒரு நாளில் 'மாஸ்டர்' உங்களுடையது என்று தயாரிப்பு நிறுவனமும் இயக்குநரும் (Lokesh Kanagarajடிவிட்டர் இல் தெரிவித்துள்ளனர்.


 



 


வாட்ஸ்அப் உட்பட பல சமூக வலைதளங்களிலும் அவை பரப்பப்பட்டு வருகின்றன. இது குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம், வெளியாக வெறும் ஒரு நாளே இருக்கும் இந்த வேளையில் இப்படிப் படத்தின் காட்சிகள் வெளியாகியிருப்பது படக்குழு மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.


Also Read | Watch: வேற வேற கெட்டப்பில் அசத்தும் விக்ரம்.. வெளியானது ‘கோப்ரா’ டீசர்..!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR