Watch: வேற வேற கெட்டப்பில் அசத்தும் விக்ரம்.. வெளியானது ‘கோப்ரா’ டீசர்..!

இமைக்கா நொடிகள் படத்தை போலவே ஹீரோவும் வில்லனும் பார்த்துக்கொள்ளாமலேயே கணித அறிவால் மோதிக்கொள்ளும் கதை என்பதை டீசர் உணர்த்துகிறது..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 9, 2021, 12:06 PM IST
Watch: வேற வேற கெட்டப்பில் அசத்தும் விக்ரம்.. வெளியானது ‘கோப்ரா’ டீசர்..! title=

இமைக்கா நொடிகள் படத்தை போலவே ஹீரோவும் வில்லனும் பார்த்துக்கொள்ளாமலேயே கணித அறிவால் மோதிக்கொள்ளும் கதை என்பதை டீசர் உணர்த்துகிறது..!

நடிகர் விக்ரம் (Vikram) ‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தை அடுத்து அஜய் ஞானமுத்து (Ajay Gnanamuthu) இயக்கத்தில் கோப்ரா (Cobra) படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் (Cricketer Irfan Pathan) நடிகராக அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதிஷெட்டி (Srinidhi Shetty) நடிக்கிறார். கடந்த பிப்ரவரி மாதத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் 7 கெட்டப்புகளில் விக்ரம் காட்சியளித்திருந்தார். இதை தொடர்ந்து AR.ரஹ்மான் (AR Rahman) இசையில் படத்தில் இடம்பெற்ற ‘தும்பி துள்ளல்’ என்ற பாடல் மற்றும் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர், ஜனவரி 9 ஆம் தேதி படத்தின் டீசரை ஏ.ஆர்.ரஹ்மான் (AR Rahman) வெளியிடுவார் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். அதன்படி இன்று டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

அதிரடி, ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும் டீசரில் கணித கோட்பாடுகளை பயன்படுத்தி குற்றம் செய்பவராக நடித்து அசத்தியிருக்கிறார் விக்ரம். அவருக்கு வில்லனாக தோன்றியுள்ளார் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான். 1 நிமிடம் 47 விநாடிகள் நீளம் கொண்ட கோப்ரா டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான அருள்நிதி நடிப்பில் ’டிமாண்டி காலனி’, நயன்தாரா நடிப்பில் ’இமைக்கா நொடிகள்’ வெற்றிப்பட இயக்குநர் அஜய் ஞானமுத்துவுடன் ஹாட்ரிக் வெற்றிகொடுக்க ‘கோப்ரா’ படத்தில்  இணைந்துள்ளார் விக்ரம்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News