காருக்கு அடியில் மாட்டிக்கொண்ட கன்று! மடக்கிப்பிடித்து காப்பாற்றிய தாய் மாடு..
Viral CCTV Footage Of Cows Chasing A Car : சில மாடுகள், கன்றை இடித்து விட்டு சென்ற காரை மடக்கி பிடித்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Viral CCTV Footage Of Cows Chasing A Car : இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் ஆப், ஷேர் சேட், டிக்டாக் என என்னற்ற சமூக வலைதளங்கள் இங்கு கொட்டிக்கிடக்கின்றன. இதில ஒரு சில ‘கலாச்சாரத்தை கெடுப்பதாக’ கூறப்பட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கின்றன. இருப்பினும் நம் ஆட்கள் எந்த தளத்தில் வீடியாே வந்தாலும் அதனை விடுவதில்லை. டிக் டாக்கிற்கு பதிலாக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஆப்ஷன் வந்துவிட்டதால், அதனை உபயோகித்து நேரத்தை கழித்து வருகின்றனர். சினிமா, இயற்கை, அரசியல் என பல்வேறு வகையிலான வரும் மீம்ஸ்களையும் வீடியாக்களையும் நாம் சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதுண்டு. அதிலும் ட்விட்டரில் இதற்கென்று பல பக்கங்கள் இருக்கின்றன. இதில் வரும் வீடியோக்கள் செய்திகளாகவும் எழுதப்படுகின்றன. அப்படி ஒரு வீடியோதான், இன்று நம் கைகளில் கிடைத்திருக்கிறது.
வைரல் வீடியோ:
ஆறறிவு கொண்ட மனிதர்கள் இருக்கும் வீடியோக்களை பார்க்கும் போது நமக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதாே இல்லையோ, ஐந்தரவு மிருகங்களை ஏதேனும் ஒரு வீடியாேவில் பார்க்கும் போது மகிழ்ச்சி பீரிட்டு அடிக்கிறது. அப்படி சில மாடுகள், தங்கள் இனத்தில் இருக்கும் குட்டியை காக்க மேற்கொண்ட முயற்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ, சத்தீஸ்கரில் இருக்கும் ராய்கார் மாவட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் முதலில் ஒரு காருக்கு அடியில் கன்று ஒன்று மாட்டிகொண்டிருக்கிறது. இதை கவனித்தோ கவனிக்காமலோ அந்த காரை ஓட்டுபவர் வண்டியை நிறுத்தாமல் அப்படியே சென்று விட்டார். இதைப்பார்த்த வேகமாக ஓடி வந்த மாடுகள், வேகமாக செல்லும் காரை விட வேகமாக சென்று, அந்த வண்டி நகர முடியாத படி நின்று கொண்டன. அதுவும் ஓரிரண்டு மாடுகள் கிடையாது. மொத்தமாக நான்கு மாடுகள் இப்படி அந்த காரை மடக்கி பிடித்துவிட்டன.
இந்த சம்பவம் வரைதான் சிசிடிவி காட்சியில் பதிவாகியிருக்கிறது. இதன் பிறகு, அந்த காரை தூக்கி அதற்கு அடியில் மாட்டியிருந்த கன்றினை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காப்பாற்றியிருக்கின்றனர். அதன் பிறகு அந்த கன்று நொண்டி நொண்டி சென்று விட்டது. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | “தம்பி ஓரம் போப்பா..” வழியில் நின்ற நபரை தாேளில் தட்டிய யானை! வைரல் வீடியோ..
மேலும் படிக்க | பூனையை தொட்டிலில் போட்டு தாலாட்டு பாடும் தமிழ் குடும்பம்! வைரல் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ