Dangerous Car Stunt Video: ஆபத்தான ஸ்டண்ட் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிக்கொண்டே இருக்கின்றன. பல சமயங்களில், அவ்வாறு ஸ்டண்ட்களில் ஈடுபட்டு தனக்கு மட்டுமல்லாது, மற்றவர்கள் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் செயல்படும் நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டு, அவர்களது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவது வரை பல செய்திகளையும் நாம் கேட்டிருப்போம். வாகனம் ஓட்டுவது பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்தமானது. கார் ஓட்டுவது என்பது சிலரின் கனவாகவும் இருக்கிறது. சாதாரணமாக வாகனம் ஓட்டுவது பெரும்பாலும் எளிதானது, ஆனால், இடம் மிக குறைவாக, நெரிசலாக உள்ள இடங்கள், மிக குறுகிஅ பாதைகள் ஆகியவற்றில் காரை சரியாக நிறுத்துவது அல்லது யு-டர்ன் எடுப்பது கடினம். சில சமயங்களில் இங்கு ஓட்டை, அங்கே பள்ளம் என்று அந்த இடத்தில் கார் சிக்கிக் கொள்ளும். அப்படிப்பட்ட நிலையில், குறுகிய மலைப்பாதையிலும் மிக லாவகமாக, யூடர்ன் எடுக்கும் ஒரு கார் ட்ரைவரின் வீடியோ, அனைவரையும் கதிகலங்க செய்துள்ளது. காரின் ஒருபுறம் ஆழமான பள்ளத்தாக்கு, மறுபுறம் மலை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் யூட்டர்ன் எடுப்பது எப்படி? வீடியோவை பார்த்து நீங்களே சொல்லுங்க..


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோவில் நீங்கள் ஒரு பக்கம் மலையையும் மறுபுறம் ஆழமான பள்ளத்தாக்கையும் காணலாம். இம்முறை சிறு தவறு செய்தாலும், காருடன் நேராக பள்ளத்தாக்கில் விழலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி U turn எடுப்பது. நினைத்து பார்க்கவே முடியாத காரியம் அல்லவா.... ஆனால் இவ்வளவு சிறிய ரோட்டிலும் சளைக்காமல் காரை மலையில் முன்னும் பின்னுமாக ஓட்டி காரை திருப்புகிறார் இந்த டிரைவர். நமக்கு பார்த்தலே ஒரு திரில்லர் படத்தை பார்ப்பது போல் கதி கலங்குகிறது. வீடியோவில் ஒரு கட்டத்தில், காரின் பின்புற டயர் முழுவதும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதை இருப்பதை நீங்கள் காணலாம். நாம், அவ்வளவு தான், என நினைத்திருப்போம். ஆனால் டிரைவர் கடைசியில் மிக சிறப்பான முறையில் யு-டர்ன் எடுத்து காட்டுகிறார். இந்த பரபரப்பான காணொளியை பார்க்கும் போது (Viral Video) நமக்கு மூச்சே நின்று விடும் போல் உள்ளது.


வைரலாகும் காணொளியை கீழே காணுங்கள்:



 


மேலும் படிக்க | நம்புங்க! இது அரச குடும்பத்தினரின் திருமணம் இல்லை... திருமண வீடியோ வைரல்


இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதற்கு பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ Figen @TheFigen_ கணக்கில் பகிரப்பட்டது. இந்த வீடியோ ஆயிரக்கணக்கான லைக்குகளையும் ஷேர்களையும் பெற்று வருகிறது. இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர். இதற்கு ஊடக பயனர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். "டிரைவர் ப்ரோ மேக்ஸ்" ஒரு பயனர் கருத்து தெரிவித்தார்.


மேலும் படிக்க | இந்த வயசிலயே இப்படியா? இணையத்தை அதிர வைத்த சூப்பர் டான்சர் பாட்டி வீடியோ வைரல்


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | பாம்புடன் விளையாடும் பாப்பா: இணையத்தை பதற வைத்த பகீர் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ