பெங்களூரு: சினிமா கதையை விஞ்சும் வகையில்,  உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் ஒரு சம்பவம் பற்றி அறிந்து கொள்ளலாம். 56 வயதான ஒருவர் தனது அம்பாசிடர் காரில் கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் வசித்து வருகிறார். ஹாலிவுட் படமான காஸ்ட் அவேவைப் (Cast Away) போலவே, 56 வயதான சந்திரசேகர் தனது அம்பாசிடர் காரில் காட்டில் வசித்து வருகிறார். கர்நாடகாவில் உள்ள அடலேல் மற்றும் நெக்கரே கிராமங்களுக்கு இடையே உள்ள ஒரு காட்டுக்குள் அவர் வசித்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காட்டு பாம்புகள் அவரது காரில் அடிக்கடி நுழைகின்றன. விலங்குகளின் அச்சுறுத்தல் உள்ளது. ஆனாலும் சந்திரசேகருக்கு காட்டிற்குள் இருந்து திரும்பி வர விருப்பம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. "காட்டு விலங்குகளை விட மனிதர்களுக்கு தான் விஷம் அதிகம், அவர்கள் தான் ஆபத்தானவர்கள்," என்று அவர் கூறுகிறார்.


ALSO READ | Viral News: பூட்டை உடைத்து ஒன்றும் கிடைக்காமல் கடுப்பான திருடன் செய்த ‘வேலை’..!!


2003 வரை, சந்திரசேகர் நெக்ரல் கெம்ராஜே கிராமத்தில் மற்றவர்களை போல் சாதாரண வாழ்க்கையையே வாழ்ந்தார். அவர் 1.5 ஏக்கர் பரப்பளவில்  விவசாயம் செய்து கொண்டிருந்தார். ஆனால்,, சந்திரசேகர், நெல்லூர் கெம்ராஜே கூட்டுறவு சங்கத்தில் இருந்து குறுகிய கால கடன் மற்றும் இரண்டு பயிர்க்கடன்களை வாங்கியது அவரது வாழ்க்கையை புரட்டிப் போட்டது. சுற்றியுள்ள மக்களால் அவர் தவறாக வழிநடத்தப்பட்டு ஏமாற்றப்பட்டதாகவும், கடனை திருப்பிச் செலுத்த முடியாததால், அவர் வாழ்வாதாரமாக இருந்த, அவர் சம்பாதித்த  சொத்துக்கள் ஏலம் விடப்பட்டது.


மனம் உடைந்த சந்திரசேகர் பின்னர் தனது சகோதரியின் இருப்பிடத்திற்கு சென்றார், ஆனால் கருத்து வேறுபாடுகள் அதிகரித்ததால் அங்கு மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. அதனால், மன உடைந்த அவர் ஒரு நாள் நாகரிக உலகத்திலிருந்து விலகி இருக்க முடிவு செய்து தனது காரில் காட்டுக்குள் சென்று காட்டில் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்கினார்.


ALSO READ | Viral Video: விஷ பாம்பை அசால்டாக கையாளும் 2 வயது குழந்தை..!!


கொரோனா பரவல் (Corona Virus) சமயத்தில், கிராமங்கள் மூடப்பட்ட நிலையில், அவர் காட்டுப்பகுதியில் கிடைத்த காட்டு பழங்களை சாப்பிட்டு உயிர் பிழைத்தார். காடுகளில் காய்ந்த கொடிகளால் செய்யப்பட்ட கூடைகளை விற்க அவர் தனது சைக்கிளில் கிராமங்களுக்குச் செல்கிறார்.


சந்திரசேகர், மனதலவில் உடைந்து போனாலும், ஒரு நாள் அவர் தனது விவசாய நிலத்தை திரும்பப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் ஒரு தன்னிறைவான வாழ்க்கையை நடத்துகிறார். அவர் தனது விவசாய நிலம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் காரில் அப்படியே வைத்துள்ளார். காட்டில் அவரது தனிமையான வாழ்க்கையை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்ற நிலையில், அப்போதைய மாவட்ட ஆணையர் ஏ.பி. இப்ராஹிம் சில வருடங்களுக்கு முன்பு அவரைச் சந்தித்தார். மாவட்ட நிர்வாகம் அவருக்கு வீடு கட்டிக் கொடுத்தது. இருப்பினும், அந்த வீடு ஒரு ரப்பர் காட்டுக்குள் கட்டப்பட்டதால், அது அவரது மனதிற்கு பிடிக்கவில்லை.


இரவுகளில் யானைகள், சிறுத்தை, காட்டுப்பன்றிகள் மற்றும் காட்டெருமைகள் உட்பட பெரும்பாலான காட்டு விலங்குகள் அவரது இருப்பிடத்திற்கு வருகின்றன. வனத்துறையின் அதிகாரிகளும் அவரை காட்டில் தனது வாழ்க்கையை நடத்த அனுமதித்தனர். "நான் ஒரு சிறிய புதரை கூட வெட்டவில்லை, என்னைச் சுற்றியுள்ள எதையும் நான் தொடாமல் அப்படியே வைத்துள்ளேன். காட்டில் என் இடத்திற்கு அருகில் ஓடும் நதியில் நான் குளிக்கிறேன். எனக்கான உணவை நானே சமைக்கிறேன்.  ஆகாசவாணியில் ஹிந்தி பாடல்களைக் கேட்கிறேன் ”என்று சந்திரசேகர் விளக்குகிறார்.


ALSO READ | Viral Video: சீறிப் பாயும் நாகப் பாம்பை தண்ணீர் கேனில் அடைத்த மந்திரவாதி..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR