புதுடெல்லி:  சிலருக்கு வேலை செய்தாலே முழுமையாக சம்பளம் கிடைக்காமல் தவிக்கும் சில சம்பவம் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்க கூடும்.  ஆனால், ஐந்தாண்டுகள் வேலை ஏதும் செய்யாமலேயே, நிறுவனத்தை முட்டாளாக்கி சம்பளத்தை வாங்கி அனுபவித்துள்ளார் ஒரு பலே கில்லாடி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆன்லைன் பகிர்வு தளமான Reddit என்னும் தளத்தில் ஒருவர் தனது இந்த  ‘திறமையை ’ பற்றி விரிவாக விளக்கியுள்ளார். இந்த நபர் தனது அடையாளத்தை மறைத்து, மற்ற ஊழியர்களைப் போல தனது பணி நேரத்தில் தான் வேலை செய்யாமலேயே, ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து ஏமாற்றி, சம்பளம் வாங்கி வருவதாகவும் கூறினார். அது மட்டுமல்ல, இந்த ஐந்தாண்டுகளில் பலமுறை சம்பள உயர்வுடன், பதவி உயர்வும் பெற்றார் என்பது தான் அதில் சுவாரஸ்யமான தகவல்.


இவரின் பணி, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர். 2015 ஆம் ஆண்டு வேலையில் சேர்ந்த இவருக்கு, இரவுப் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. இரவு நேரத்தில், தரவு வடிவில் கணினியில் விப்ரங்களை செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், இரவு அவர் வேலை எதுவும் செய்யவில்லை என்பதோடு, பல சமயங்களில் பணி நேரத்தில் தூங்கி விடும் பழக்கமும் இருந்தது. 


ALSO READ | Viral Video: ‘என்ன கொடுமை சார் இது’; தன்னைத் தானே விழுங்கும் பாம்பு..!!


ஆனால், வேலையை முடிக்க, இந்த பலே  கில்லாடி நபர், சில குறியீடுகளைப் பயன்படுத்துவதாகக் கூறினார். இந்த குறியீடுகளின் மூலம், அவரது 9 மணி நேர வேலை ஐந்து நிமிடங்களில் முடிந்து விடும். அவர் ஒரு ஃப்ரீலான்ஸ் மென்பொருள் நிபுணரால் தயாரிக்கப்பட்ட ஒரு மென்பொருள் குறியீட்டை பணம் கொடுத்து வாங்கியுள்ளார். 


அவர் வேலை செய்ய வில்லை என்றாலும்,  இரவு   முழுவதும் தனது கணிணியை ஆன் செய்து வைத்து விடுவார். இந்த மென்பொருள் குறியீட்டு முறையை பயன்படுத்துவதால்,  இரவு முழுவதும் அவர் வேலை செய்வது போன்று தரவுகள் காண்பிக்கும். இதனால் அவர் இரவு முழுவதும் ஆன்லைனில் வேலை செய்வது போல் பதிவாகும். ஐந்தாண்டுகளில் இவர் வேலை செய்யாமல், அதற்கான சம்பளத்தை பெற்று வருகிறார் என்பதை யாராலும் கண்டுபிடிக்க  முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தர வரிசையில் மற்ற ஊழியர்களை விட முன்னிலையில் இருக்க குறியீட்டை மாற்றும் பழக்கத்தையும் கொண்டிருந்தார்.


ALSO READ | Viral Video: ‘வசூல் ராஜா MBBS’ படத்தை மிஞ்சும் வகையில் ஹைடெக் காப்பிடித்த மாணவர்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR