துருக்கியின் கந்தர் கிராமத்தில், வசித்து வரும் சிறுமி செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆகஸ்டு 10ம் தேதி நடந்த சம்பவம் உங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும்.  SE என்ற முதலெழுத்துகளால் அடையாளம் காணப்பட்ட இரண்டு வயது சிறுமி, தன் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​திடீரென்று சத்தமாக கத்த ஆரம்பித்தாள். உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று குழந்தையை பார்த்தபோது, ​​வாயில் 50 சென்டிமீட்டர் நீளமுள்ள பாம்பை கடித்துக் கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவளது உதட்டில் பாம்பு கடிபட்ட அடையாளத்தையும் கண்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து உடனடியாக சிறுமியை மீட்டு அருகாமையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  இந்த சம்பவம் குறித்து விவரித்த சிறுமியின் தந்தை மெஹ்மத் எர்கான், ‘என் குழந்தையின் கையில் பாம்பு இருந்ததாகவும், அவள் அதனுடன் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், பின்னர் அது அவளைக் கடித்ததால், அவள் ஆத்திரமடைந்து கடித்து விட்டதாக எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்னிடம் சொன்னார்கள்’ என்று  கூறினார். 


எனினும் உரிய சிகிச்சைக்கு பின்னர் சிறுமியின் உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுது. தம்மை  பாம்பு தீண்டியதால், கோபத்தில் சிறுமி பாம்பை கடித்து துப்பியதாக கூறப்படுகிறது. சிறுமி வீட்டிற்கு வெளியே மற்ற குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த போது அங்கு வந்த பாம்புடன் விளையாடி இருக்கிறார். அப்போது பாம்பு சிறுமியின் கீழ் உதட்டை அது கவ்வியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிறுமி, பாம்பை திருப்பி கடித்துள்ளார் என்றே தெரிய வந்துள்ளது. இதில் பாம்பு இறந்து விட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக சிறுமிக்கு பாம்பின் விஷத்திற்கு பலியாகாமல் தப்பித்து விட்டார். 


மேலும் படிக்க |  Viral Video: மலைப்பாம்பிடம் சிக்கிய முதலை... திக் திக் நிமிடங்கள்


துருக்கியில் மொத்தம் 45 வகையான பாம்புகள் காணப்படுகிறது. இதில் 12 வகை பாம்புகள் கொடிய விஷம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. உலக சுகாதார அமைப்பின் (WHO) பாம்பு கடி குறித்து கூறுகையில், குழந்தைகளின்  உடல் நிறை எனப்படும் body mass குறைவாக காரணமாக பெரியவர்களை விட, சிறியவர்கள் பாம்பு கடியினால் இறக்கும் வாய்ப்புகள் அதிகம் என  கூறியுள்ளது.


பாம்பு விஷம் ஆபத்தானது. ஏனெனில் அதில் நரம்புத் தூண்டுதலுக்கு இடையூறு விளைவிக்கும் நியூரோடாக்சின்கள் உள்ளன. பாம்பு கடித்தால் ஏற்படும் சில ஆபத்தான விளைவுகள் பக்கவாதம், ரத்தக்கசிவு, திசு சேதம் மற்றும் உறுப்பு செயலிழப்பு ஆகியவை ஆகும். 


மேலும் படிக்க |  Viral Video: அப்படி என்ன தான் சாப்பிட்டீங்க சார்... போதையில் ‘தள்ளாடும்’ அணில்!


மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ