Viral News: இந்த நாட்டில் தங்கத்தை விட ஆணுறையின் விலை அதிகம்; விலை ரூ.60,000 மட்டுமே
Viral: மிகவும் அதிக விலை உயர்ந்த பொருள் என்றால், பொன்னைப் போன்று விலை உயர்ந்தது என அடிக்கடி கூறப்படுவதை நீங்கள் கேட்டிருக்க கூடும். ஆனால் ஆணுறை பொன்னை விட அதிக விலையில் விற்கப்படுகிறது என்பதைக் கேட்டால் ஆச்சர்யப்படக் கூடும்.
மருத்துவ அறிவியல் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது. மருத்துவத்தில் தேவையற்ற கர்ப்பத்தைத் கலைக்க வேண்டும் என்றால் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. தேவையற்ற கர்ப்பத்தை இரண்டு வழிகளில் தடுக்கலாம். முதலாவது மருந்துகள் மூலம், இரண்டாவது கருக்கலைப்பு உதவியுடன். இருப்பினும், நாட்டின் பெரும்பாலான நாடுகளில் கருக்கலைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது மற்றும் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே இது அனுமதிக்கப்படுகிறது.
அத்தகைய சூழ்நிலையில், மக்கள் கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவதே சிறந்த மாற்றாக உள்ளது. உலகில் பெரும்பாலானோர், பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக, கர்ப்பம் அடைவதை தவிர்க்க கருத்தடை சாதனங்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் கருத்தடை தொடர்பான சாதனங்களை வாங்க, தங்கத்தை விட அதிகமாக செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ள ஒரு நாடும் உலகில் உள்ளது என்றால் ஆச்சர்யமாக உள்ளது இல்லையா.
60 ஆயிரம் ரூபாய்க்கு ஆணுறை
மற்ற கருத்தடை பொருட்களை விட இங்கு கருத்தடை மாத்திரைகள் மற்றும் ஆணுறைக்கான தேவை அதிகமாக இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நாட்டில் ஒரு ஆணுறை பேக்கெட்டின் விலை 60 ஆயிரம் ரூபா வரை இருக்கிறது. ஆச்சரியம் என்னவென்றால், இவ்வளவு அதிக விலை இருக்கும் போதும், அதிக டிமாண்ட் உள்ளது. இதன் விற்பனை அமோகமாக இருக்கிறது. இது தவிர கருத்தடை மாத்திரைகளின் விலை சுமார் 5-7 ஆயிரம் ரூபாய். இது தவிர, மற்ற கருத்தடை சாதனங்களும் மிகவும் விலை உயர்ந்தவை. கறுப்புச் சந்தையில் அவற்றின் விலை மேலும் அதிகமாக உள்ளது.
மேலும் படிக்க | ஆண்களுக்கு ரசாயன மாசுபாடு ஏற்படுத்தும் விந்தணு குறைபாடு
அதிக விலை உயர்வுக்கான காரணம்
வெனிசுலாவில் தான் இந்த அளவிற்கு அதிக விலையில் விற்கப்படுகிறது. தென் அமெரிக்காவின் இந்த நாட்டில், எந்த சூழ்நிலையிலும் கருக்கலைப்பு சட்டப்படி குற்றம் ஆகும். சிறைக்குச் செல்வதையும் கருக்கலைப்புச் சூழ்நிலையையும் தவிர்க்கும் பொருட்டு, மக்கள் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருக்க கவனமாக கருத்தடை சாதனங்களை பயன்படுத்துகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், கருத்தடை தொடர்பான பொருட்கள் இங்கு தொடர்ந்து விலை உயர்ந்து வருகின்றன.
மேலும் படிக்க | பகீர் தகவல்! காற்று மாசுபாடு விந்தணு எண்ணிக்கையை குறைக்கிறதா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR