எண்ண எண்ண குறையாத பணம்: அட்சய பாத்திரமாய் மாறிய கோயில் உண்டியல்
ராஜஸ்தானின் ஸ்ரீ சன்வலியா சேத்தின் இரண்டு நாள் மாதாந்திர கண்காட்சியின் முதல் நாளில் சதுர்தசியன்று புதன்கிழமை நன்கொடை பெட்டி திறக்கப்பட்டது. பணம் எண்ணும் பணி தொடர்கிறது.
சித்தோர்கர்: கோயில்களுக்கான நனொடைகள், மத நன்கொடைகள் என்று வரும்போது, இந்தியர்களின் இதயங்கள் எவ்வளவு பெரியதாகி விடுகின்றன, தாராளமயமாகி விடுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. பக்தி காரணமாக, விசுவாசம் காரணமாக இந்திய கோவில்களில் பக்தர்கள் தினமும் அதிக எண்ணிக்கையில் நன்கொடைகளை அளிக்கிறார்கள்.
நம் நாட்டில் மிகப்பெரிய அளவில் நன்கொடை வழங்கப்படும் கோயில்கள் பல உள்ளன. திருப்பதி (Thirupathi) ஏழுமலையான் கோயில், ஜம்மு வைஷ்ணோ தேவி கோயில், ஷீரடி சாய் பாபா கோயில், மும்பையிலுள்ள சித்தி விநாயகர் கோயில் என நாட்டின் அனைத்து திசைகளிலும் இப்படிப்பட்ட கோயில்கள் பல உள்ளன.
இவற்றில் ராஜஸ்தானின் சித்தோர்கர் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சன்வலியா சேத் கோயிலும் ஒன்றாகும். புதன்கிழமை, இந்த கோயிலுக்கு கிடைத்த நன்கொடையின் அளவு சமீப காலங்களில் பெறப்பட்ட மிகப்பெரிய அளவாகும். நேற்று இங்கு நன்கொடையாக பெறப்பட்ட ரூபாய் நோட்டுகளை எண்ணி எண்ணி கோயில் அதிகாரிகளுக்கு கைகளில் வலி ஏற்பட்டு விட்டதாம். ஆம்!! இது உண்மைதான்.
ALSO READ: செய்வினை, பில்லி, சூனியம், கண்திருஷ்டி போன்றவை நீக்கும் எளிய பரிகாரம்
ஸ்ரீ சன்வலியா சேத் கோயிலின் (Temple) இரண்டு நாள் மாதாந்திர கண்காட்சியின் முதல் நாளில் சதுர்தசியன்று புதன்கிழமையன்று நன்கொடை பெட்டி திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்டி திறக்கப்பட்டபோது, அதில் தங்கம் மற்றும் வெள்ளியுடன் பெரிய அளவிலான ரூபாய் நோட்டு குவியல்களும் இருப்பது கண்டறியப்பட்டது. ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணியில் டஜன் கணக்கான மக்கள் ஈடுபட்டனர். ஆனால் ரூபாய் நோட்டுகளின் அளவு மிக அதிகமாக இருந்ததால், அவற்றை எண்ணி எண்ணி அவர்கள் சோர்வடைந்தனர்.
ஒரு வழியாக அன்றைய ரூபாய் நோட்டு எண்ணிக்கை முடிந்த பின்னர், நன்கொடை பெட்டியின் எண்ணப்பட்ட பணத்தின் மொத்த தொகை இதுவரை ரூ .6 கோடி 17 லட்சம் 12 ஆயிரம் 200 ரூபாய் என கூறப்பட்டுள்ளது. இது தவிர, 91 கிராம் தங்கம், 4 கிலோ 200 கிராம் வெள்ளி ஆகியவையும் இந்த நன்கொடை பெட்டியிலிருந்து வெளியே எடுக்கப்படன. மீதமுள்ள ரூபாய் நோட்டுகள் வியாழக்கிழமை, அதாவது இன்று கணக்கிடப்படும்.
பண எண்ணிக்கையில் எந்த வித்தியாசமும் இல்லாம இருப்பதை உறுதிப்படுத்த, மந்திர் மண்டலத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான ரத்தன்குமார் சுவாமி, மந்திர் மண்டல வாரியத்தின் தலைவர் கன்ஹையதாஸ் வைஷ்ணவ் மற்றும் பிற அதிகாரிகளும் ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையின் போது உடன் இருந்தனர்.
ராஜஸ்தான் கோயிலில் நன்கொடை பெட்டி அட்சய பாத்திரமாய் பணத்தை அளித்துக்கொண்டிருக்கும் செய்தி சமூக ஊடகங்களில் வைரல் (Viral) ஆகி வருகிறது.
ALSO READ: Youngest Donor: கேன்சர் நோயாளிகளுக்காக தன் தலைமுடியை தானம் செய்த 2 வயது சிறுவன்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR