Viral: நீச்சல்குளத்திற்குள் ஊர், அப்பார்ட்மெண்ட் கலக்கும் துபாய்
உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் துபாயில் அமைக்கப்பட்டுள்ளது. 14 மில்லியன் லிட்டர் நீரைக் கொண்டிருக்கும் இந்த நீச்சல் குளத்தின் கொள்ளளவு ஆறு ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளங்களுக்கு சமம் ஆகும்.
துபாய்: துபாய் உலகிலேயே மிகவும் சிறந்த பொழுதுபோக்குத் தளம் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது. தண்ணீருக்கும் ஒரு நகரம், அபார்ட்மென்ட் மற்றும் உலகின் ஆழமான நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.
நாட் அல் ஷெபா-வில் (Nad Al Sheba) அமைந்துள்ள இந்த நீச்சல் குளம் 60.02 மீட்டர் ஆழம் கொண்டது, இதுதான் உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் (Swimming Pool). 14 மில்லியன் லிட்டர் நீரைக் கொண்டிருக்கும் இந்த நீச்சல் குளத்தின் கொள்ளளவு ஆறு ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளங்களுக்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது.
நீருக்கடியில் உள்ள உலகத்தை ஆராய விரும்புகிறீர்களா? உங்களுக்கு டைவிங் செய்வதில் ஆர்வம் இருக்கிறதா? இரண்டுமே இல்லையென்றாலும் ஊர் சுற்றிப் பார்க்கும் ஆவல் இருக்கிறதா? உங்களுக்கு துபாய் புதிய அனுபவத்தைத் தர காத்துக் கொண்டிருக்கிறது.
உலகின் மிகவும் ஆழமான டைவிங் பூல், டீப் டைவ் துபாய் விரைவில் திறக்கப்பட உள்ளது, சாகச ஆர்வலர்களுக்கு கொண்டாட்டம்தான். நாட் அல் ஷெபா-வில் (Nad Al Sheba) அமைந்துள்ள இந்த நீச்சல் குளம் 60.02 மீட்டர் ஆழம் கொண்டது, இதுதான் உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் (Swimming Pool). 14 மில்லியன் லிட்டர் நீரைக் கொண்டிருக்கும் இந்த நீச்சல் குளத்தின் கொள்ளளவு ஆறு ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளங்களுக்கு சமம் என்று பிரமிக்க வைக்கிறது.
இன்னும் ஓரிரு வாரத்தில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதற்கான முன்பதிவுகள் ஜூலை பிற்பகுதியில் இணையதளத்தில் தொடங்கிவிடும்.10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பார்வையாளர்களுக்காக இந்த நீச்சல் குளம் திறக்கப்படும்.
இது வெறும் நீச்சல் குளம் மட்டுமல்ல, நீருக்குள் ஒரு நகரம் உள்ளது, மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள், நீரில் மூழ்கிய நூலகம், விளையாட்டு அறை, தெருக்கள் என பிற சுவாரஸ்யமான அம்சங்களுடன் நீருக்கடியில் காத்துக் கொண்டிருக்கிறது. நீருக்குள் இருக்கும் புதிய இல்லை பழைய உலகத்தை பார்த்து மகிழலாம்.
டீப் டைவ் துபாய் வலைத்தளத்தில் (Deep Dive Dubai website) குறிப்பிடப்பட்டுள்ளது. “இந்த நீச்சல் குளத்தின் கருப்பொருள் கைவிடப்பட்ட மூழ்கிய நகரம் என்பது தான்.
நீருக்கடியில் உள்ள உலகம் உங்களை ஈர்க்கும்.. சாகசமும் ஆச்சரியமும் நிறைந்த இந்த மாபெரும் நீச்சல் குளத்தில், நீருக்கடியில் உள்ள நகரத்தை ஆராலாம். டைவர்ஸின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த குளத்தில் 56 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிநவீன விளக்குகள் மற்றும் ஒலி அமைப்புகள் நீருக்கடியில் பல்வேறு வகையான அனுபவங்களைத் தரும்” என்று Deep Dive Dubai website வலைதளம் கூறுகிறது.
குளத்தின் நீர் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒரு முறை வடிகட்டப்பட்டு மீண்டும் குளத்திற்குள் விடப்படுகிறது, நீச்சல் குளத்தின் வெப்பநிலை 30. C இல் பராமரிக்கப்படுகிறது.
Also Read | ரஜினிகாந்தைப் போல சூப்பர் ஸ்டண்ட் செய்ய முயன்று அடிபட்ட டூப்ளிகெட் ரஜினி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR