Viral Video: ரஜினிகாந்தைப் போல சூப்பர் ஸ்டண்ட் செய்ய முயன்று அடிபட்ட டூப்ளிகெட் ரஜினி

ரஜினிகாந்தைப் போல மேக்கப் போட்ட ஒருவர், சூப்பர் ஸ்டாரைப் போல ஸ்டண்ட் செய்ய முயலும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. ஆனால் முயற்சி படுமோசமாக தோல்வியடைகிறது. இந்த வைரல் வீடியோ பலராலும் ரசிக்கப்பட்டு பகிரப்படுகிறது.

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 7, 2021, 08:45 PM IST
  • ரஜினிகாந்தைப் போல மேக்கப் போட்டவர் செய்யும் ஸ்டண்ட்
  • முயற்சி படுமோசமாக தோல்வியடைகிறது
  • வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது
Viral Video: ரஜினிகாந்தைப் போல சூப்பர் ஸ்டண்ட் செய்ய முயன்று அடிபட்ட டூப்ளிகெட் ரஜினி

ரஜினிகாந்தைப் போல மேக்கப் போட்ட ஒருவர், சூப்பர் ஸ்டாரைப் போல ஸ்டண்ட் செய்ய முயலும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. ஆனால் முயற்சி படுமோசமாக தோல்வியடைகிறது. இந்த வைரல் வீடியோ பலராலும் ரசிக்கப்பட்டு பகிரப்படுகிறது.

என்ன இருந்தாலும், அசல், மாஸ் தான், நகல், டூப்ளிகேட் தான் என பல பஞ்ச் வசனங்களுடன் இந்த சூப்பர் ஸ்டாரின் டூப்பர் வீடியோ வைரலாகிறது.

பார்ப்பதற்கு ரஜினிகாந்த்தைப் போல இருக்கலாம். அவரது ஸ்டைலான தோற்றத்தை எப்படியாவது மேக்கப் போட்டு கொண்டு வர வைத்துவிடலாம். ஆனால் தலைவரைப் போலவே யாராலும் ஸ்டைல் காட்ட முடியாது என்று ஆயிரக்கணக்கானவர்கள் பதிவிட்டுள்ளனர். 

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைப் போல உடையணிந்த ஒருவரை மேடையில் காணலாம். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தும் கலைஞர் அவர்.

சூப்பர்ஸ்டாரைப் போல அதிரடியாய் ஸ்டைல் காட்டி, ஒரு நாற்காலியை உதைக்கிறார். நாற்காலியும் உதையை வாங்கிக் கொண்டு மேலே எழுகிறது. ஆனால், நடிகரின் கால் நாற்காலியில் சிக்கி, அவர் மேடையில் இருந்து விழுகிறார்.

Also Read | #HappyBirthdayDhoni: தோனி ரசிகர்கள் எப்பவுமே மாஸ்! அவர்கள் உருவாக்கிய போஸ்டர்கள்

அவர் விழுந்தவுடன், மேடையில் இருந்தவர்கள் அவரைப் பிடிக்க முயற்சிக்கிறார்கள், ஆனால் அவர் கீழே விழுகிறார். அதை பார்க்கும் அனைவருக்கும் முதலில் குபீர் சிரிப்புதான் வருகிறது. இந்த சம்பவம் எங்கு எப்போது நடந்தது என்று தெரியவில்லை.

ஆனால் சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோ வைரலாகி மக்களை சிரிக்க வைக்கிறது. ஈமோஜிகளைப் பயன்படுத்தி பெரும்பாலான மக்கள் வீடியோவில் கருத்து தெரிவித்தனர். 

விளையாட்டாக பகிரப்பட்டாலும், அந்த நடிகர் ரஜினிகாந்தைப் போலவே இருக்கிறார் என்பதும், அவரைப் போலவே ஸ்டைல் காட்டுகிறார் என்பதும் தெரிகிறது. இந்த வைரல் வீடியோவில் நாற்காலியில் கால் சிக்கி கீழே விழுந்தாலும், அவருக்கு பெரிய அளவில் காயம் ஏதும் ஏற்படவில்லை…   

Also Read | அரிய மரபணு நோயினால் 5 மாத குழந்தையின் உடல் கல்லாக மாறும் சோகம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News