கொரோனாவினால், ஒரு பக்கம் பேரழிவை சந்து வருகிறது. ஆனால், மறு பக்கம் இயற்கை தன்னை தானே புதுப்பித்துக் கொள்கிறது. இந்த கொரோனா வைரஸ் கிருமி, மனிதனை வீட்டில் அடைத்து வைத்துள்ளாதால்,  இது சாத்தியமாகியுள்ளது. கொரோனா காலத்தில் சில அதிசயங்களும் நடக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

COVID-19 காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ளதால், சஹாரன்பூரில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது. அரசு ஊழியரும், புகைப்படக் கலைஞருமான துஷ்யந்த் குமார் உட்பட பலர் இந்த அற்புதமான காட்சியைக் தங்கள் கேமிராவில் பதிவு செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள்  சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்திய வன சேவை அதிகாரி ரமேஷ் பாண்டேவும் சஹாரன்பூரிலிருந்து சில கண்கவர் புகைப்படங்களை  ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்.


கடந்த ஆண்டு, 2020 ஆம் ஆண்டிலும், இமயமலையின் பனி மூடிய சிகரங்களை பார்க்க முடிந்ததாக செய்திகளில் பார்த்தோம். அதே போன்று இந்த ஆண்டிலும், பனி மூடிய இமயமலை மலைத்தொடரை உத்தரபிரதேசத்தில் காண முடிந்தது.


குறைந்த மாசுப்பாடு, மழைக்கால வானிலை மற்றும் தெளிவான வானம் ஆகியவை காரணமாக, இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. இந்த காட்சிகளை நேரில் கண்டு மகிழந்தவர்கள், இணையத்தில் பதிவிட்டு, மற்றவர்களையும் மகிழ்வித்துள்ளனர்.


ALSO READ | COVID-19: இந்தியாவின் இந்த கிராமத்தில் இன்று வரை கொரோனா இல்லை; இல்லவே இல்லை


 


முன்னதாக மாசு காரணமாக பல தசாப்தங்களாக இமய மலாஇயை காண முடியாமல், காற்றில் உள்ள மாசுபாடு அதை மறைத்திருந்தது. ஆனால் COVID-19 ஊரடங்கு காரணாமாக மனித நடமாட்டம் குறைந்ததோடு, மழையினால் தெளிவான வானத்தில்  காற்று மாசுபாடு குறைந்துவிட்டதால், மக்களை மகிழ்விக்க  இந்த அழகான காட்சி மீண்டும் தோன்றியுள்ளது எனலாம்.


ALSO READ | Viral Video: பாதுகாக்க வேண்டிய போலீஸாரே திருட்டில் ஈடுபட்ட சம்பவம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR