அமிர்தசரஸ்: பஞ்சாப் காவல்துறையில் ஒரு தலைமை கான்ஸ்டபிள் ஒரு பிஸியான சாலையில் யாரும் இல்லாத வண்டியில் இருந்து முட்டைகளைத் திருடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது. வைரல் வீடியோவில் காணப்படுபவர், கான்ஸ்டபிள், பிரித்பால் சிங் என அடையாளம் காணப்பட்டார்.
வண்டியின் உரிமையாளர் அருகில் இல்லாத நிலையில், சாலையோரத்தில் இருந்த முட்டை விற்பனையாளர்களின் வண்டியில் இருந்து தனது போலீஸ் சீருடையில் சில முட்டைகளை பதுக்கிக் கொண்டது வீடியோவில் பதிவாகி விட்டது. சண்டிகரில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஃபதேஹ்கர் சாஹிப் நகரத்திலிருந்து சமீபத்திய சம்பவம் தான் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
சிங்கை காட்டிக் கொடுத்த வீடியோ, யாரோ ஒருவரால், ஒரு மொபைல் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஆகும். உரிமையாளர் வண்டிக்கு அருகில் திரும்பி வந்த போது அவர் எப்படி விரைவாக சாலையைக் கடக்க முயன்றார் என்பதை இந்த வீடியோவில் காணலாம். பின்னர் போலீஸ்காரர் ஒரு ஆட்டோ ரிக்ஷாவை நிறுத்துமாறு சமிக்ஞை செய்து முட்டைகளுடன் (Egg)அதில் சென்று விட்டார்.
அந்த வீடியோ வைரலாகி, சிங் என்பவர் அவரது பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பஞ்சாப் காவல்துறை ட்வீட் செய்தது.
A video went viral wherein HC Pritpal Singh from @FatehgarhsahibP is caught by a camera for stealing eggs from a cart while the rehdi-owner is away and putting them in his uniform pants.
He is suspended & Departmental Enquiry is opened against him. pic.twitter.com/QUb6o1Ti3I
— Punjab Police India (@PunjabPoliceInd) May 15, 2021
"ஒரு வீடியோ வைரலாகியது, அதில் ஃபதேஹ்கர் சாஹிப் காவல்துறையைச் சேர்ந்த எச்.சி. பிரித்பால் சிங் ஒரு வண்டியில் இருந்து முட்டைகளைத் திருடிய போது கேமராவில் பிடிபட்டார். அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார் மற்றும் அவருக்கு எதிராக துறைசார் விசாரணை திறக்கப்படுகிறது, ”என்று பஞ்சாப் காவல்துறை ட்வீட் செய்துள்ளது.
ALSO READ | அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு; சானிடைசரை அதிகம் பயன்படுத்துவதும் ஆபத்து
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR