X Æ A-XII இதுதான் டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் முதலாளி எலோன் மஸ்க்கின் குழந்தை பெயர். ஆச்சரியமான இந்த பெயர் தொடர்பான செய்திகள் மே மாதமே வெளிவந்து வைரலாகியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2018 முதல் கிரிம்ஸுடன் டேட்டிங் செய்து வருகிறார் எலோன் மஸ்க் (Elon Musk).  தங்கள் முதல் குழந்தையை 2020 மே மாதம் பிறந்ததாக, எலன் மஸ்க் மற்றும் அவர்து தோழி கிரிம்ஸ் (Grimes) அறிவித்தனர்.


தற்போது தங்கள் ஆண் குழந்தையான எக்ஸ் Æ ஏ-எக்ஸ்ஐஐ-க்கு (X Æ A-XII) வீட்டில் எப்படி வித்தியாசமான ஹேர்கட் செய்தோம் என கிரிம்ஸ் தனது இன்ஸ்ட்ராகிராம் பதிவில் வெளியிட்டுள்ளார். தி லாஸ்ட் கிங்டம் (The Last Kingdom) என்ற தொடரிலிருந்து ஈர்க்கப்பட்டு, குழந்தைக்கு வீட்டிலேயே இந்த ஸ்டைலான சிகை அலங்காரம் செய்த்தாக கிரிம்ஸ் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.  



கடந்த ஆண்டு இந்த ஜோடி, தங்கள் குழந்தைக்கு X Æ A-12 Musk என்று பெயரிடுவதாக செய்தி வெளியானபோது, அந்த பிஞ்சுக் குழந்தை   இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் குழந்தைக்கு பெயர் வைத்தபோது பெயர் பெயரை எக்ஸ் Æ ஏ-ஜி (X Æ A-Xii) என்று வைத்தனர்.  


Also Read | WhatsApp Web பயன்படுத்துபவரா?, அப்போ உடனே இதை செய்யுங்கள்..!


அதற்கு காரணம் என்ன தெரியுமா? கலிபோர்னியா நாட்டின் சட்டப்படி, குறியீடுகள் மற்றும் எண்களைப் பயன்படுத்தி பெயர் வைக்க முடியாது. ஆங்கில எழுத்துக்களில் 26 எழுத்துக்களை பயன்படுத்திதான் குழந்தைக்கு பெயர் வைக்க முடியும்.  எனவே எலோன் மஸ்கின் குழந்தையின் பெயர் X Æ A-Xii என்று வைக்கப்பட்டது.


இப்போது, குழந்தை மீண்டும் செய்திகளில் இடம் பெற்றுள்ளது. குழந்தையின் அம்மா, X Æ A-Xii-க்கு செய்த விசித்திரமான ஹேர்கட் தான் காரணம்.


பாடகியான கிரிம்ஸ் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குழந்தையின் சில புதிய படங்களை வெளியிட்டார், அதில் குழந்தைக்கு ஹேர்கட் செய்யும் படமும் இடம்பெற்றது. ஒரு படத்தில், மகனை    குளியல் தொட்டியில் உட்கார வைத்து ஹேர்கட் செய்வது இருந்தது. அது இணையத்தில் மிகவும் வைரலானது.


Also Read | பிரபல தொலைக்காட்சி நேரலையில் காணப்பட்ட செக்ஸ் பொம்மை, அதிர்ந்து போன செய்தியாளர்..


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G 


Apple Link - https://apple.co/3loQYeR