நீங்க WhatsApp Web பயன்படுத்துபவரா?, அப்போ உடனே இதை செய்யுங்கள்..!

WhatsApp Web அல்லது Desktop WhatsApp-யை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் உங்களது கணக்கை பாதுகாக்க உடனே இதை செய்யுங்கள்... 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 30, 2021, 09:51 AM IST
நீங்க WhatsApp Web பயன்படுத்துபவரா?, அப்போ உடனே இதை செய்யுங்கள்..! title=

WhatsApp Web அல்லது Desktop WhatsApp-யை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் உங்களது கணக்கை பாதுகாக்க உடனே இதை செய்யுங்கள்... 

WhatsApp Web மற்றும் டெஸ்க்டாப் பதிப்பில் கூடுதலான பாதுகாப்பு வசதியை வழங்குவதாக WhatsApp தெரிவித்துள்ளது. இந்த புதிய அப்டேட் உடன் உங்கள் WhatsApp கணக்கை உங்கள் கணினியுடன் இணைக்க விரும்பும்போது கூடுதல் பாதுகாப்பு கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும்.

மொபைல் போன் OS உடன் கிடைக்கும் முகம் அல்லது கைரேகை திறத்தல் அங்கீகார வசதியை கூடுதல் பாதுகாப்பு அங்கீகாரமாக வாட்ஸ்அப் பயன்படுத்திக் கொள்கிறது. WhatsApp Web அல்லது Desktop WhatsApp-யை இணைக்க, உங்கள் தொலைபேசியிலிருந்து QR குறியீட்டை ஸ்கேன் செய்வதற்கு முன்பு, உங்கள் தொலைபேசியில் உள்ள முகம் அல்லது கைரேகை திறத்தல் போன்றவற்றின் மூலம் அனுமதியை வழங்குமாறு கேட்கப்படுவீர்கள்.

ALSO READ | உங்களது WhatsApp அரட்டையை Telegram-க்கு மாற்றலாம் - இதோ வழிமுறை!

இதன் மூலம் உங்கள் அனுமதியின்றி உங்கள் வீட்டில் இருப்பவர்களோ அல்லது உங்கள் அலுவலகங்களில் உடன் பணிபுரிபவர்களோ உங்கள் WhatsApp கணக்கை அணுக முடியாது.  இது வாட்ஸ்அப்பின் தற்போதைய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடுதலாக இதுவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் Web / Desktop WhatsApp பதிப்பில் Login தேவைப்படும் போதெல்லாம் தொலைபேசியில் ஒரு அறிவிப்பு பாப் அப் ஆகும், நீங்கள் இல்லாத நேரத்தில் மற்றவர்கள் வாட்ஸ்அப்பை அணுக முயன்றால் நீங்கள் அதை தடுத்துக்கொள்ளலாம்.

சாதனங்களை இணைப்பதற்கான புதிய பாதுகாப்பு புதுப்பிப்பு, தொலைபேசிகளில் Desktop WhatsApp வலைப்பக்கத்திற்கு காட்சி மறுவடிவமைப்புடன், வரும் வாரங்களில் இணக்கமான சாதனங்களைக் கொண்ட பயனர்களுக்கு வெளியாகும்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News