Viral Sorry: இதுவொரு வித்தியாசமான ராஜினாமா கடிதம்
வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாவது அண்மைக் காலங்களில் மிகவும் அதிகமாகிவிட்டது. ஆனால், இதுவொரு வித்தியாசமான வீடியோ.
வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாவது அண்மைக் காலங்களில் மிகவும் அதிகமாகிவிட்டது. ஆனால், இதுவொரு வித்தியாசமான வீடியோ.
எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்த ஆம்பர் என்ற பெண், ஆனால் அவர் தனது மேலதிகாரியின் நடத்தையால் சோர்வடைந்து வேலையை விட்டுவிட்டார். தனது கோபத்தை அவர் எப்படி வெளிப்படுத்தினார் தெரியுமா? தனது ராஜினாமா கடிதத்தை முதலாளிக்கு இரங்கல் அட்டை வடிவில் அனுப்பினார் இந்தப் பெண். அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், முதலாளிகளுக்கும் மனத்தாங்கல் (Dispute between Employee and Employer) ஏற்படுவது சகஜமாக இருக்கிறது.
பெரும்பாலும் ஊழியர்கள், தங்கள் முதலாளிகளுடன் நெருங்கிப் பழகுவதில்லை. "மக்கள் வேலைகளை விடுவதற்கு மோசமான வேலை காரணமல்ல. மோசமான முதலாளிகளுக்காக, நல்ல வேலைகளை விட்டுவிடுகிறார்கள்" என்ற வார்த்தைகளைக் கேட்டிருக்கலாம்.
இந்தப் பெண், தனது வேலையை விட்டதை விட, அதை அவர் எப்படி தனது முதலாளிக்குத் தெரிவித்தார் என்பது தான் வைரலாவதற்கு காரணமாகிவிட்டது. 'Sorry for your loss' என்று எழுதி தனது ராஜினாமா கடிதத்தை துக்க அட்டை வடிவில் கொடுத்தார். அதாவது, இந்த ஆங்கில வாசகத்திற்கு, நான், வேலையை விடுவது உங்களுக்கு இழப்பு என்றும் பொருள் கொள்ளலாம்.
ALSO READ | ஒற்றை மரத்தில் மூன்று நாகங்கள்! இணையத்தில் வைரலாகும் முப்பாம்புகள்!!
அம்பர் என அடையாளம் காணப்பட்ட பெண், தனது ராஜினாமா கடிதத்தின் படத்தை ரெடிட்-இல் (Reddit) வெளியிட்டார். அம்பர் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்ததாகவும், ஆனால் தனது மேலதிகாரியின் நடத்தையால் (Behavior in Work Place) சோர்வடைந்து வேலையை விட்டுவிட்டதாகவும் சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த பெண் அவருக்கு 'உங்கள் இழப்புக்கு வருந்துகிறேன்' என்று ஒரு இரங்கல் அட்டையை அனுப்பினார். "இது நான் தான், நான் இரண்டு வாரங்களில் செல்கிறேன்" என்றும் அதில் பதிவிட்டுள்ளார்.
வேலையை விட்ட பெண்ணுக்கு, அதிக சம்பளம் மற்றும் சலுகைகளுடன் சிறந்த வேலை கிடைத்துவிட்டதாம்! "நான் கேட்டதை விட அதிகமான சம்பளத்திற்கு வேலை கிடைத்தது. சொந்த வாகனம் அவர்கள் படிக்கவும் எனக்கு நிதியுதவி செய்வார்கள்" என்று ஆம்பர் எழுதினார்.
ராஜினாமா கடிதத்தைப் பெறுவதற்கு தனது முதலாளி எவ்வாறு பதிலளித்தார் என்பதையும் அந்தப் பெண் வெளிப்படுத்தினார். "அவர் என்னை வெளியேறச் சொல்லவில்லை, அதாவது எனது ஒப்பந்தத்தில் இருப்பதுபோல, அடுத்த இரண்டு வாரங்களுக்கு நான் வேலை செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நான் ஏன் வெளியேறுகிறேன் என்று அவரும் கேட்கவில்லை" என்று அம்பர் சொன்னார்.
READ ALSO | Facebook பயன்படுத்துவேன்! என்னை அறைஞ்சா ஒரு மணி நேரத்துக்கு $8 சம்பளம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR