புதுடெல்லி: பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். அதிலும் ஒரே இடத்தில் மூன்று பாம்புகள் தலையை தூக்கி கம்பீரமாக இருந்தால், பார்ப்பவர்களுக்கு ஏற்படும் பீதிக்கு அளவும் உண்டோ?
இந்திய காடுகளில் இதுபோன்ற பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன. டிஜிட்டல் யுகத்தில், காடோ, வீடோ, எங்கிருந்தாலும் சரி, அதிசயமான மற்றும் அபூர்வமான விஷயங்கள் படமாக்கப்பட்டு, இணையத்தில் உலா வருகின்றன.
நேரில் பார்த்தால் பாம்பின் சீற்றத்தை நினைத்து நடுங்கும் நாம், வீடியோவில் என்பதால், மகிழ்ச்சியாக பாம்பின் படையெடுப்பைப் பார்க்கலாம். இதுபோன்ற பல வீடியோக்கள் இணையத்தில் (Viral Snake Video) படமாக உலா வருகின்றன.
மகாராஷ்டிராவில் மூன்று நாகப்பாம்புகளின் சிலிர்க்க வைக்கும் படம் நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்துகிறது. வன அதிகாரி ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ள இந்த புகைப்படம், அமராவதி மாவட்டத்தில் உள்ள ஹரிசல் காட்டில் மூன்று நாகப்பாம்புகள் ஒரே மரத்தில் பிணைந்து இணைந்திருப்பதை காட்டுகிறது.
Blessings...
When three cobras bless you at the same time.
Rajendra Semalkar. pic.twitter.com/EZCQTumTwT— Susanta Nanda IFS (@susantananda3) November 16, 2021
NDTV அறிக்கையின்படி, இந்த படங்கள் முதலில் இந்திய வனவிலங்கு (Indian Wildlife) என்ற பேஸ்புக் குழுவில் பகிரப்பட்டன. இந்த பாம்புகள் மீட்கப்பட்டு காட்டில் விடப்பட்ட பின்னர் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதில் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ள ஐஎஃப்எஸ் அதிகாரி நந்தா, நவம்பர் 16ஆம் தேதி, “ஆசீர்வாதம்... ஒரே நேரத்தில் மூன்று நாகப்பாம்புகளைப் பார்ப்பது ஆசீர்வாதம் தான்” என்று ட்வீட் செய்துள்ளார்.
இந்த ட்வீட் விரைவில் வைரலாகி (Viral Tweet) 3.6k லைக்குகளையும் பல ரீட்வீட்களையும் பெற்றுள்ளது. நெட்டிசன்கள் இந்தக் காட்சியைக் கண்டு வியப்படைந்தனர், எனவே பல்வேறு கருத்துக்களையும் பதிவிட்டுள்ளனர். மற்றொருவர் பயனர் இப்படி எழுதியுள்ளார்: “ஆஹா! அழகானவை, ஆனால் தீவிரமானவை மற்றும் கடுமையானவை, கிட்டத்தட்ட தெய்வீகமானவை!” என்று எழுதியுள்ளார்.
Also Read | அசால்டாய் பாம்புகளை அப்புரப்படுத்தி அசர வைத்த நபரின் வீடியோ வைரல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR