இணையத்தில் எண்ணிலடங்கா வீடியோக்கள் அனுதினமும் பகிரப்படுகின்றன. அதில் விலங்களுக்கு இடையிலான போராட்டம் தொடர்பான வீடியோக்கள் மிகவும் வைரலாகும். உயிரை காப்பாற்றிக் கொள்ள நடக்கும் போராட்டங்கள், சில சமயம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன, சில சமயம் அதிர்ச்சிகளையும் கொடுக்கின்றன. சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. எத்தனை வீடியோக்கள் பகிரப்பட்டாலும் பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் எளிதில் வைரலாகும்.  அந்த வகையில், மூன்று குழந்தைகள் தங்கள் செல்ல நாயைக் காப்பாற்ற ராட்சத பாம்புடன் சண்டையிடும் பழைய வீடியோ சமூக வலைதளங்களில் மீண்டும் வெளியாகி வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாய்க்குட்டி உயிருக்கு போராடு வருவதை வீடியோவில் காணலாம், நாயை மலைப்பாம்பு ஒன்று சுற்றி வளைத்திருப்பதை வீடியோவில் காணலாம். மலைப்பாம்பு தன் இரையை உயிருடன் விழுங்கும் திறன் கொண்டது.  ஒரே அடியில் இரையை வீழ்த்தும் திறன் கொண்டவை. 


ஆனாலும் தங்கள் செல்ல நாயை காப்பாற்ற மூன்று குழந்தைகளும் அஞ்சாமல் களத்தில் இறங்கின. இரண்டு குட்டிப் பையன்கள் பாம்பின் பிடியைத் தளர்த்த பாம்பை இழுக்கும்போது, ஒரு பெரிய பையன் குச்சி ஒன்றிலால் மலைப் பாம்பு  தலையை தரையில் தள்ள முயற்சிப்பதைக் காணலாம். பாம்பு இன்னும் நாயை இறுக்கிஉ, அதைக் கொல்ல முயற்சிக்கும் போது, சிறுவர்கள் மலைப்பாம்பை பிரிக்க முயலுவதைக் காணலாம். பின்னர் பெரிய பையன் கம்பியை பயன்படுத்தி பாம்பின் தலையைக் கட்டுப்படுத்துகிறான். மூன்று சிறுவர்கள் பாம்பை எதிரெதிர் திசைகளில் இருந்து இழுத்து, அதன் பிடியில் இருந்து  நாயை விடுவிக்க போராடுகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


மேலும் படிக்க | Viral Video: 1956 பிரிட்ஜில் இத்தனை அம்சங்களா... வியக்க வைக்கும் விளம்பரம்


வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்:


 



 


செல்ல நாய் கடைசியில் மலைப்பாம்பிலிருந்து விடுபட்டு விடுகிறது. ட்விட்டரில் பகிரப்பட்ட வீடியோ 19.7 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. மலைப் பாம்புடன் தைரியமாக போராடி தங்கள் செல்லப்பிராணியைக் காப்பாற்றும் அளவுக்கு தைரியமாக குழந்தைகள் இருப்பதை நெட்டிசன்கள் பாராட்டினர்.


மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ