சாமானியர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் மட்டுமே காவல்துறையை அழைக்கிறார்கள். ஆனால் இப்போது ஒரு குழந்தை போலீசை அழைத்தால் கற்பனை செய்து பாருங்கள். நியூசிலாந்தில் இருந்து இதுபோன்ற ஒரு ஆச்சரியமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது, அங்கு 4 வயது குழந்தை தனது தந்தையின் மொபைலில் இருந்து போலீசுக்கு கால் பண்ணி வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளது. அதன் பின்னணி கேட்டல் உங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது குழந்தை காவல்துறைக்கு (Police Department) கால் பண்ணி தன்னிடம் உள்ள பொம்மைகளை காட்ட விரும்புவதாக போலீசாரிடம் கூறியுள்ளது. குழந்தையுடன் தொடந்து பேசிய காவல்துறையினர், ​​அந்தக் குழந்தையின் பொம்மைகளைப் பார்க்க நிச்சயமாக அவர் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று போலீசார் முடிவு செய்தனர். 


கர்ட் என்ற போலீஸ் அதிகாரி குழந்தையின் வீட்டிற்கு சென்றுள்ளார் மற்றும் அந்த குழந்தை வைத்துள்ள அனைத்து பொம்மைகளையும் பார்த்தார். அந்த குழந்தையும் மகிழ்ச்சியாக தனது பொம்மைகளை அவருக்கு காட்டியுள்ளது. காவல்துறையினரின் இந்த செயல் தற்போது சமூக ஊடகங்களில் மிகவும் பாராட்டப்பட்டு வருகிறது. காவல்துறையின் இந்த அழகான செயல் அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளது.


 
ALSO READ |  Watch Viral Video: பிள்ளை நோய்க்கு கள்ளமில்லை என்பது இது தானோ..!!


இந்தச் செய்தி பற்றிய தகவலை நியூசிலாந்தின் (New Zealand) தெற்குத் தீவு காவல்துறை வழங்கியது. சமூக ஊடகங்களில் ஒரு பதிவைப் பகிர்ந்து அதில், "இது ஒரு அழகான அழைப்பு இருந்தது. அதை இங்கே பகிராமல் இருக்க முடியாது எனக்கூறியுள்ளார். 


உண்மையில், 4 வயது குழந்தை தனது தந்தையின் மொபைலில் இருந்து அவசர எண் 111 ஐ டயல் செய்து, தனது தந்தைக்கு தெரியாமல் போலீசாரிடம் பேசியுள்ளது. அந்தக் குழந்தை தனது அழகான பொம்மைகளைக் காண்பிப்பதற்காக அவர்களுக்கு போன் செய்துள்ளது. 


குழந்தை அழைப்பை மேற்கொண்டதும், அதை எடுத்த போலீசாரிடம் இது பெண் போலீஸின் எண்ணா? எனக் குழந்தை கேட்டுள்ளது. போலிஸ் ஆபரேட்டர், உங்களுக்காக நாங்கள் என்ன சேவை செய்ய வேண்டும்? என்று குழந்தையிடம் கேட்டுள்ளார். அப்போது குழந்தை தனது பொம்மைகளை காட்ட வீட்டிற்கு அவரை அழைத்துள்ளது.


ALSO READ |  Viral News: பூட்டை உடைத்து ஒன்றும் கிடைக்காமல் கடுப்பான திருடன் செய்த ‘வேலை’..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR