புதுடெல்லி: டெல்லியில் ஏர் இந்தியா விமானம் மேம்பாலத்தின் கீழ் சிக்கிக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லி-குர்கான் நெடுஞ்சாலையில் தேசிய தலைநகரின் IGI விமான நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. ஏர் இந்தியா விமானம் சாலையின் ஒரு ஓரத்தில் மேம்பாலத்தின் கீழ் சிக்கி கொண்டிருப்பதையும், வாகங்கள்அதனை கடந்து செல்வதையும் 40 வினாடிக்கான அந்த வீடியோவில் காணலாம்.  விமானம் சாலையில் நடு பகுதியில் சிக்கியிருப்பதைக் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலத்தின் அடியில் விமானம் சிக்கிய வீடியோ வைரலான பிறகு, இது குறித்து கருத்து தெரிவித்த ஏர் இந்தியா (Air India) விமான நிறுவனம், எந்தவித அசம்பாவிதமும்  ஏற்படவில்லை என்றும்  பழைய விமானங்களை அப்புறப்படுத்தும் ஸ்கிராப் திட்டத்தில் அப்புறப்படுத்தப்பட்ட விமான என்றும் விமான நிறுவனம் உறுதி செய்தது. விமானத்தை ஏர் இந்தியாவிடம் இருந்து வாங்கிய அதன் புதிய உரிமையாளர் அதனை கொண்டு செல்வதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.



ALSO READ | கழிப்பறையில் ‘திடீர்’ பிரசவம்; ‘உள்ளே’ விழுந்த சிசு இறந்த சோகம்..!!


"இது பழைய, உபயோகிக்கப்படாத அப்புறப்படுத்தப்பட்ட விமானம், இதனை ஏற்கனவே நாங்கள் விற்று விட்டோம். இது யாருக்கு விற்கப்பட்டது என்பது சம்பந்தமான கூடுதல் தகவல் இல்லை, ”என்று  தனியார் பத்திரிக்கை ஒன்றிடம் ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறினார்.


இந்த விமானம் நிச்சயமாக டெல்லி விமான நிலையத்திற்கு சொந்தமானது அல்ல  எனவும் அதில் இறக்கைகள் இல்லாமல் இருப்பதையும் வீடியோவில் காணலாம். இது ஒரு ஸ்கிராப் செய்யப்பட்ட விமானம் போல் தான் தோன்றுகிறது. அதை எடுத்துச் செல்லும் போது டிரைவர் செய்த தவறு காரணமாக, மேம்பாலத்தில் அடியில் இவ்வாறு சிக்கி இருக்கலாம் என்று அந்த அதிகாரி கூறினார்.


ALSO READ | Viral Photos: மலைப்பாம்பு இரத்த வாந்தி எடுப்பதை பார்த்திருக்கிறீர்களா..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR